அதிகாலை நேரத்தில் மெகாஸ்டார் மம்மூட்டிக்கு உதவிய தமிழக இளைஞரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில், நிதிஷ் சஹாதேவ் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புக்காக மம்மூட்டி தமிழ்நாட்டின் காரைக்குடிக்கு வந்திருந்தார். படப்பிடிப்பை முடித்துவிட்டு தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப், நடிகர் ரமேஷ் பிஷாரடி உள்ளிட்டோருடன் காரில் கேரளா திரும்பிக் கொண்டிருந்தார். அதிகாலை 3.30 மணியைக் கடந்த நிலையில், திருப்பத்தூர் பகுதியில் நெடுஞ்சாலை மூடப்பட்டிருந்ததால், அவர்களது பயணம் தடைபட்டது.