சுதந்திர தின விழாவில் குழந்தையுடன் பிரதமர் மோடி நடந்துகொண்ட விதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின உரையை முடித்த பிறகு, விழாவில் பங்கேற்ற குழந்தைகளை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து கலந்துரையாடினார். அப்போது சிறுமி ஒருவர் பிரதமர் மோடியின் காலில் விழுந்து வணங்கினார்.