AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
முன் சக்கரம் இல்லாத சைக்கிளில் எவரெஸ்ட் பயணம் - சாதனை முயற்சியில் கேரள இளைஞர்

முன் சக்கரம் இல்லாத சைக்கிளில் எவரெஸ்ட் பயணம் – சாதனை முயற்சியில் கேரள இளைஞர்

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 18 Aug 2026 10:34 AM IST

Front Wheel Less Ride : கேரளாவைச் சேர்ந்த இளைஞர் சன்னி தேவிசார் என்பவர் முன் சக்கரம் இல்லாத சைக்கிளில் கேரளாவில் இருந்து எவரெஸ்ட் பேஸ் கேம்ப் வரை பயணம் மேற்கொண்டு சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர் ஏற்கனவே முன் சக்கரம் இல்லாத சைக்கிளில் கேரளாவில் இருந்து காஷ்மீர் வரை 7 ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமாக பயணம் செய்துள்ளார்

கேரளாவைச் சேர்ந்த இளைஞர் சன்னி தேவிசார் என்பவர் முன் சக்கரம் இல்லாத சைக்கிளில் கேரளாவில் இருந்து எவரெஸ்ட் பேஸ் கேம்ப் வரை பயணம் மேற்கொண்டு சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர் ஏற்கனவே இதேபோன்று முன் சக்கரம் இல்லாத சைக்கிளில் கேரளாவில் இருந்து காஷ்மீர் வரை 7 ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமாக பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இன்டீரியர் டிசைன் படித்து வரும் சன்னி, இந்திய ராணுவ வீரர்களுக்கு சாகச பயிற்சிகளும் வழங்கி வருகிறாராம். தற்போது போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். தற்போது திருச்சி வந்துள்ள அவர், அங்கிருந்து நேபாளம் செல்ல திட்டமிட்டிருக்கிறார். தினமும் 50 முதல் 60 கி.மீ தூரம் வரை சைக்கிளில் பயணம் செல்கிறார். அவரது இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Published on: Aug 18, 2026 09:56 AM
Follow Us