AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
இனி வேகமா போவியா ? - கோவையில் ஸ்பீட் ரேடார் கேமராவுடன் போலீஸார் அதிரடி கண்காணிப்பு!

இனி வேகமா போவியா ? – கோவையில் ஸ்பீட் ரேடார் கேமராவுடன் போலீஸார் அதிரடி கண்காணிப்பு!

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 19 Aug 2026 07:40 AM IST

கோவை மாநகரில் நாளுக்கு, நாள் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைத் தடுக்கும் பொருட்டு, அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் அதிநவீன வேகக் கண்காணிப்புக் கருவிகளுடன் காவல் துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாநகர எல்லைக்குள் வாகனங்கள் அதிகபட்சமாக மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது.

​ கோவை மாநகரில் நாளுக்கு, நாள் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைத் தடுக்கும் பொருட்டு, அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் அதிநவீன வேகக் கண்காணிப்புக் கருவிகளுடன் காவல் துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாநகர எல்லைக்குள் வாகனங்கள் அதிகபட்சமாக மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. இந்த வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக வரும் வாகனங்களைக் கண்டறிய, சின்னியம்பாளையம் உள்ளிட்ட நகரின் முக்கியச் சந்திப்புகளில் போலீஸார் ‘வேகக் கண்காணிப்புக் கருவி’ மூலம் கண்காணித்து வருகின்றனர். அதிவேகமாக வரும் வாகனங்களின் பதிவு எண்கள் (Number Plates) மற்றும் வாகனங்களின் வேகம் ஆகியவை இந்தக் கருவி மூலம் துல்லியமாக வீடியோ மற்றும் புகைப்படமாகப் பதிவு செய்யப்படுகிறது. தொடர்ந்து, அதிவேகமாகச் சென்ற வாகன உரிமையாளர்களின் செல்லிடைப்பேசிக்கு ஆன்லைன் மூலம் நேரடியாக அபராதச் சல்லான் (E-Challan) அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

Published on: Aug 19, 2026 07:17 AM
Follow Us