ஆந்திராவில் பள்ளி மாணவர் உயிரிழப்பு – ஆசிரியர் தாக்கியதாக குடும்பத்தினர் புகார்
ஆந்திரப் பிரதேசம் விசாகப்பட்டினத்தில் தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்த 6 வயது மாணவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். வீட்டுப்பாடத்தை முடிக்காததால் ஆசிரியர் மாணவரைத் தாக்கியதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். பள்ளி சிசிடிவி காட்சிகளில் ஆசிரியர் மாணவரைத் திட்டி, பின்னர் அறைந்ததும், சில விநாடிகளில் மாணவர் மடியில் சாய்ந்து விழுவதும் பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆந்திரப் பிரதேசம் விசாகப்பட்டினத்தில் தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்த 6 வயது மாணவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். வீட்டுப்பாடத்தை முடிக்காததால் ஆசிரியர் மாணவரைத் தாக்கியதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். பள்ளி சிசிடிவி காட்சிகளில் ஆசிரியர் மாணவரைத் திட்டி, பின்னர் அறைந்ததும், சில விநாடிகளில் மாணவர் மடியில் சாய்ந்து விழுவதும் பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மாணவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாக குடும்பத்தினர் கூறினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவருக்கு உடல்நலக் குறைவு ஏதும் இல்லை என தந்தை தெரிவித்துள்ளார். பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே உயிரிழப்புக்கான சரியான காரணம் தெரியவரும். அமைச்சர் நாரா லோகேஷ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தாக்கியதால் மாணவர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு
கோப்புகளை சீக்கிரம் திறக்க வேண்டும் முதல்வருக்கு உதயநிதி கோரிக்கை
திருச்சியில் ரயில் விபத்து சோதனை - விரைவு மீட்பு பணி!
சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகள் - மதுரையில் தயாரிப்பு!
