திருச்செந்தூர் ஆவணி திருவிழா.. ஏற்பாடுகள் தீவிரம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணித் திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 12 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும். கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த திருவிழா, இந்த ஆண்டு ஆகஸ்ட் 31, 2026 அன்று காலை 9 மணி முதல் 9.30 மணி அளவில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணித் திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 12 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும். கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த திருவிழா, இந்த ஆண்டு ஆகஸ்ட் 31, 2026 அன்று காலை 9 மணி முதல் 9.30 மணி அளவில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் போது தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி வீதி உலா வரும். திருவிழாவின் 10வது நாளில் பிரசித்தி பெற்ற தேரோட்டம் கோலாகலமாக நடைபெறும். 10 ஆம் நாள் தேரோட்டம் அன்று விநாயகர் தேர், சுவாமி குமரவிடங்க பெருமாள் மற்றும் வள்ளியம்மன் தேர்கள் என நான்கு ரத வீதிகளிலும் வலம் வரும். இந்த திருவிழாவுக்கு ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவையில் நகை வியாபாரியிடம் ரூ.1 கோடி வழிப்பறி; நடந்தது என்ன?
கோவையில் நூதன திருட்டு: சிசிடிவியில் சிக்கிய டிப்டாப் ஆசாமி!
கேரளாவில் கோர விபத்து: 8 தமிழ்நாட்டு பொறியியல் மாணவர்கள் பலி..
குட்டையில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்த காட்டு யானைகள்..
