லக்னோவில் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு, சகோதரியையும் கொன்று, பின்னர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறும் விவகாரத்தில், ஒரு கோடி ரூபாய் ஜீவனாம்சம் கேட்கப்பட்டதாக கூறப்படும் தகவல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லக்னோவைச் சேர்ந்த 38 வயதான மனஸ் வாஜ்பாய், தனது மனைவி திவ்யா மிஸ்ராவை கோமதி நகர் பகுதியில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி முன்பு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். திவ்யா அந்த வங்கியில் பணியாற்றி வந்துள்ளார். மனைவியை சுட்டுக் கொன்ற பின்னர், மனஸ் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு தனது சகோதரி சிவா வாஜ்பாயையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது. பின்னர், மனஸ் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்