கோவை கல்லூரியில் உற்சாக ஓணம் கொண்டாட்டம்.. மகிழ்ச்சியில் மாணவர்கள்!
மலையாள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை (ஆகஸ்ட் 26, 2026) கொண்டாடப்பட உள்ள நிலையில் பல்வேறு கல்லூரிகளில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோவையிலும் பல்வேறு கல்லூரிகளில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
மலையாள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை (ஆகஸ்ட் 26, 2026) கொண்டாடப்பட உள்ள நிலையில் பல்வேறு கல்லூரிகளில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோவையிலும் பல்வேறு கல்லூரிகளில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 25, 2026) நவ இந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் கல்லூரி மாணவ மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து வந்து ஓணம் பண்டிகை நிகழ்ச்சிகளில் பங்கேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கல்லூரி வளாகத்தில் அத்தப்பூ கோலமிட்டு, மகாபலி மன்னனை வரவேற்ற கல்லூரி மாணவ மாணவிகள் கேரள பாரம்பரிய நடனம் ஆடினர். தொடர்ந்து செண்டை மேளம் நிகழ்வில் மகாபலி மன்னனுடன் மாணவ, மாணவிகள் உற்சாகமாக நடனமாடினர்.
