AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இருசக்கர வாகன நிறுத்தத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. மலமலவென பற்றிய தீ!

Sathis S
Sathis S | Updated On: 27 Aug 2026 23:36 PM IST

சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியில் தஸ்வின் இருசக்கர வாகன நிறுத்தம் செயல் பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 27, 2026) அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் காரணமாக தீ மலமலவென இருசக்கர வாகனம் நிறுத்தம் முழுவதும் பரவியதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11 இருசக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது.

சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியில் தஸ்வின் இருசக்கர வாகன நிறுத்தம் செயல் பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 27, 2026) அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் காரணமாக தீ மலமலவென இருசக்கர வாகனம் நிறுத்தம் முழுவதும் பரவியதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11 இருசக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. இந்நிலையில் தீ விபத்து குறித்து சாலையில் சென்ற இளைஞர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையினர் மற்றும் இரவு ரோந்து காவல் ஆய்வாளர் கிட்டு தலைமையிலான காவலர்கள் ஆகியோர் தீ குடியிருப்பு பகுதிகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே திடீர் தீ விபத்து குறித்து செவ்வாய் பேட்டை தீயணைப்பு துறையினர் மற்றும் அம்மாபேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம், ஆத்தூர் பிரதான சாலை பகுதியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக பேருந்து மற்றும் வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர்.

Published on: Aug 27, 2026 11:36 PM
Follow Us