AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
புழல் சிறைச்சாலை, காவல் நிலையத்தில் முதல்வர் ஜோசப் விஜய் திடீர் ஆய்வு

புழல் சிறைச்சாலை, காவல் நிலையத்தில் முதல்வர் ஜோசப் விஜய் திடீர் ஆய்வு

Sathis S
Sathis S | Updated On: 02 Sep 2026 10:39 AM IST

CM Vijay Inspection: தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று புழல் சிறைச்சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆய்வின்போது, கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று புழல் சிறைச்சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆய்வின்போது, கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். குறிப்பாக, தண்டனைக் கைதிகளுக்கு வழங்கப்படும் தொழில் பயிற்சி மற்றும் கல்வி தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து, புழல் சிறைச்சாலைக்கு அருகே உள்ள புழல் எம்-3 காவல் நிலையத்திலும் முதல்வர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு நிலுவையில் உள்ள வழக்குகள், காவலர்களின் பணிகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வை முடித்துவிட்டு காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது, காத்திருப்போர் அறையில் புகார் அளிக்க வந்திருந்த இரண்டு பெண் வழக்கறிஞர்களுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார். முதல்வரின் திடீர் ஆய்வால் புழல் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். குறிப்பாக பெண்கள் உள்ளிட்ட பலர் அவரைக் காண குவிந்தனர்.

Published on: Aug 28, 2026 07:41 PM
Follow Us