கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு: இன்று சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதையடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இன்று (ஆகஸ்ட் 29) தற்காலிகமாக மூடப்படுவதாக கோவை வனக்கோட்டம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதையடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இன்று (ஆகஸ்ட் 29) தற்காலிகமாக மூடப்படுவதாக கோவை வனக்கோட்டம் தெரிவித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலம் பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், அருவியின் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழை நிலவரம் மற்றும் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து, சூழல் சுற்றுலாவை மீண்டும் திறப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
