AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
கோவையில் தேசிய அளவிலான குதிரையேற்ற லீக் போட்டிகள் தொடக்கம்!

கோவையில் தேசிய அளவிலான குதிரையேற்ற லீக் போட்டிகள் தொடக்கம்!

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 29 Aug 2026 12:53 PM IST

கோவை வெள்ளானைப்பட்டி அடுத்த மோளப்பாளையம் பகுதியில் தேசிய அளவிலான குதிரையேற்ற லீக் போட்டிகள் ஆகஸ்ட் 28 தொடங்கின. ஈக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா கூட்டமைப்பு மற்றும் இன்டிஜெனஸ் ஹார்ஸ் சொசைட்டி தமிழ்நாடு இணைந்து நடத்தும் இப்போட்டிகள் வரும் 30ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. ‘இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக்’ என்ற பெயரில் நடைபெறும் இந்த போட்டியின் 2-வது சீசனுக்கான அறிமுக நிகழ்ச்சியும், பங்கேற்கும் அணிகளின் அறிமுக நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

சென்னை புல்ஸ், பெங்களூர் நைட்ஸ், கொல்கொண்டா சார்ஜர்ஸ், பெகாசஸ் ஸ்போர்ட்ஸ், எலைட் ஈக்வெஸ்ட்ரியன்ஸ் உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன. 6 மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் களமிறங்கியுள்ளனர். புதுடெல்லியைச் சேர்ந்த சர்வதேச குதிரையேற்ற கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட நடுவர்கள் முன்னிலையில் 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. மொத்தம் ரூ.30 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு 2 பிரிவுகளில் நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக ஒரு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

Follow Us