கோவையில் குதிரையேற்ற போட்டி.. நடிகர்கள் ஆர்யா, ஷாம் ஆகியோர் பங்கேற்பு!
கோவை மாவட்டம், மேலப்பாளையத்தில் ஆகஸ்ட் 28, 2026 அன்று தொடங்கிய தேசிய அளவிலான ஈக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் குதிரையேற்ற போட்டி, விறுவிறுப்பான போட்டிகளுடன் நிறைவு பெற்றது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் இப்போட்டியில் பங்கேற்றன.
கோவை மாவட்டம், மேலப்பாளையத்தில் ஆகஸ்ட் 28, 2026 அன்று தொடங்கிய தேசிய அளவிலான ஈக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் குதிரையேற்ற போட்டி, விறுவிறுப்பான போட்டிகளுடன் நிறைவு பெற்றது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் இப்போட்டியில் பங்கேற்றன. 100 செ.மீ, 110 செ.மீ. மற்றும் 120 செ.மீ. என மூன்று பிரிவுகளில் ஷோ ஜம்பிங் போட்டிகள் நடைபெற்றன. இறுதி போட்டியில் தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், சட்டமன்ற உறுப்பினர், சத்தியபாமா ,பிரபல திரைப்பட நடிகர்கள் ஆர்யா மற்றும் ஷாம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பார்வையிட்டனர். அதன் பிறகு நடிகர்கள் ஷாம் மற்றும் ஆர்யா ஆகியோர் நிகழ்ச்சியில் உரையாற்றினர்.
