Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Krishna Jayanthi

Krishna Jayanthi

இந்தியா முழுவதும் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று தான் கிருஷ்ண ஜென்மாஷ்டமி. இது தென்னிந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. விஷ்ணுவின் தசாவதாரங்களில் 9வது அவதாரமாக கிருஷ்ண அவதாரம் உள்ளது. அதர்மம் எங்கெல்லாம் தலை தூக்குகிறதோ, அங்கெல்லாம் நீதியை நிலைநாட்ட கிருஷ்ண பகவான் தோன்றுவார் என்ற அடிப்படை கருத்தின் அடிப்படையில் கிருஷ்ணர் பிறந்த இந்த கிருஷ்ண ஜென்மாஷ்டமி மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. வாசுதேவர் – வாசுகி தம்பதியினரின் 8வது மகனாக கிருஷ்ணர் பிறந்தார். இவர் அவரது மாமனான கம்சன் மன்னரின் அழிவுக்கு காரணமாக இருப்பான் என அசரீரி ஒலித்தது. இதனால் நிறைமாத கர்ப்பிணியான வாசுகி – வசுதேவர் இருவரையும் கம்சன் சிறையில் அடைத்தான். ஆவணி மாதம் தேய்பிறையில் வரும் அஷ்டமி நாளில் ரோகிணி நட்சத்திரத்தில் சிறையில் நள்ளிரவில் கிருஷ்ணர் பிறந்தார். இந்நாள் வெகுவிமரிசையாக விரத வழிபாடு, சிறப்பு பூஜை, பல்வேறு நிகழ்ச்சிகள் என கொண்டாடப்படுகிறது. இந்த தொகுப்பில் கிருஷ்ண ஜெயந்தி தொடர்பான தகவல்களை காணலாம்

Read More

Krishna Jayanthi: வளமான வாழ்வு.. கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த 4 ராசிக்கு லக்!

கிருஷ்ண ஜென்மாஷ்டமி 2025 ஆகஸ்ட் 16 ஆம் தேதி வருகிறது. இந்த ஆண்டு புதாதித்ய யோகம் உள்ளதால், கடகம், துலாம், தனுசு, கும்பம் ராசிக்காரர்கள் மிகுந்த வளம் பெறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. கடக ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் முன்னேற்றம், துலாம் ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பணவரவு ஆகியவை இருக்கும் என நம்பப்படுகிறது.

Gokulashtami 2025: கிருஷ்ண ஜெயந்தி.. 56 வகை உணவுகள் படைக்க காரணம் இதோ!

கிருஷ்ண ஜென்மாஷ்டமி, ஆகஸ்ட் 16, 2025 அன்று கொண்டாடப்படுகிறது. அப்போது கிருஷ்ணருக்கு 56 வகையான உணவுகள் படைப்பதன் பின்னணியில் இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த 56 வகை உணவுப் படைப்பு கிருஷ்ண பக்தர்களின் பக்தியையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது எனவும் நம்பப்படுகிறது.

Krishna Jayanthi: கிருஷ்ண ஜெயந்தி விழா.. வீட்டில் வழிபாடு செய்வது எப்படி?

2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. வீட்டில் கிருஷ்ணருக்கு வழிபடுவது எப்படி என்பது பற்றிக் காணலாம். இந்நாளில் வீட்டில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் அணிவித்து மகிழலாம். அந்த வழிபாட்டு முறைகள் பற்றி நாம் காணலாம்.

Gokulashtami: கிருஷ்ணர் பிறப்பின் அர்த்தம் தெரியுமா? – இதைப் படிங்க!

கிருஷ்ண ஜென்மாஷ்டமி, விஷ்ணுவின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணரின் பிறந்தநாளாக குறிப்பிடப்படுகிறது. இது கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகை 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்துக்களால் பெரு விழாவாகக் கொண்டாடப்படும் இதன் சிறப்புகள் பற்றிக் காணலாம்.

Krishna Jayanthi: 2025 கிருஷ்ண ஜெயந்தி எப்போது? – அதன் சிறப்புகள் தெரியுமா?

கிருஷ்ண ஜெயந்தி, இந்துக்களின் முக்கிய பண்டிகை, ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியில் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர், விஷ்ணுவின் 8வது அவதாரமாகும். கிருஷ்ண பகவான் தீமை ஒழித்து நன்மை செய்பவர். இந்நாளில் விரதம், வழிபாடு செய்வதன் மூலம் வாழ்வில் இன்பம் பெறலாம் என நம்பப்படுகிறது. இப்பண்டிகை கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி எனவும் அழைக்கப்படுகிறது.