Gokulashtami: கிருஷ்ணர் பிறப்பின் அர்த்தம் தெரியுமா? – இதைப் படிங்க!
கிருஷ்ண ஜென்மாஷ்டமி, விஷ்ணுவின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணரின் பிறந்தநாளாக குறிப்பிடப்படுகிறது. இது கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகை 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்துக்களால் பெரு விழாவாகக் கொண்டாடப்படும் இதன் சிறப்புகள் பற்றிக் காணலாம்.

கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்பது விஷ்ணுவின் 8வது அவதாரமான கிருஷ்ணர் பிறப்பை குறிக்கும் நிகழ்வாகும். இது தமிழ்நாட்டில் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி என அழைக்கப்படுகிறது. என்னதான் விஷ்ணு பகவான் வைணவ சமயத்தார்களால் வழிபடக்கூடிய கடவுள் என கூறப்பட்டாலும், சைவ சமயத்தார்களும் வழிபடவே செய்கிறார்கள். அந்த வகையில் கிருஷ்ண ஜெயந்தி அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படும் ஒரு அற்புதமான பண்டிகையாகும். கிருஷ்ணர் ஆவணி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி நாளில் அவதரித்ததாக நம்பப்படுகிறது.உத்தரபிரதேசத்தில் உள்ள மதுராவில் இருந்த சிறை ஒன்றில் வாசுதேவருக்கும் – தேவகிக்கும் மகனாய் பிறந்தார். கிருஷ்ணரால் தான் தனது மாமாவான மன்னர் கம்சருக்கு அழிவு ஏற்படப்போகிறது என தீர்க்க தரிசனத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கம்சன் நிறைமாத கர்ப்பிணியான வாசுகி மற்றும் வாசுதேவரை சிறையில் அடைத்தான். அங்கு பிறந்த கம்சன் யமுனை நதிக்கரையின் மறுபக்கம் பிருந்தாவனத்தில் இருந்த யசோதா – நந்த தேவர் தம்பதியினரிடத்தில் வளர்ந்தான்.கிருஷ்ண பகவான் பிறக்கும்போது கையில் தாமரை, சங்கு, சக்கரம் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அதேபோல் தன்னுடைய வாழ்க்கையில் 3 வயது வரையில் கோகுலம், 6 வயது வரையில் பிருந்தாவன், 8 வயது வரையில் கோபியர் கூட்டம், 10 வயது வரை மதுராவிலும் கழித்ததாக நம்பப்படுகிறது.
Also Read: Krishna Jayanthi: 2025 கிருஷ்ண ஜெயந்தி எப்போது? – அதன் சிறப்புகள் தெரியுமா?
இப்படியாக கிருஷ்ணர் பிறந்த தினமானது 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி சனிக்கிழமை வருகிறது. இம்முறை ஆடி மாதத்தின் கடைசி நாளில் மிகச் சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்து இதிகாசங்களில் அன்பு, மென்மை மற்றும் இரக்கத்தின் கடவுளாக கிருஷ்ணர் அறியப்படுகிறார். அசரீரி குரலின்படியே பின்னாளில் இரக்கமற்ற முறையில் மதுராவை ஆண்டு வந்த கம்ச மன்னரை கிருஷ்ணர் அழித்தார். எப்போதெல்லாம் உலகில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் அதர்மத்தை அழிக்க பகவான் அவதாரமெடுப்பார் என சொல்லப்படும். அதற்கு உதாரணமாக கிருஷ்ணர் திகழ்கிறார்.
இந்நாளில் கிருஷ்ணர் தங்கள் வீட்டுக்கு வருவதாக ஐதீகம் கொண்டு மக்கள் குழந்தைகளின் கால் தடத்தை வீட்டின் வாசலில் இருந்து பூஜையறை வரை வரைவார்கள். அதேசமயம் குழந்தை கிருஷ்ணருக்கு பிடித்த திண்பண்டங்களை நைவேத்தியமாக வைத்து வழிபாடுகள்.
Also Read: Lord Krishna: வாழ்க்கையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய கிருஷ்ணர் கோயில்கள்!
மேலும் வீட்டில், கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு மிகச்சிறப்பாக செய்யப்படும். இளைஞர்கள் பிரமிடு போன்ற கோபுரம் அமைத்து உறியடி நிகழ்ச்சியில் ஈடுபடுவார்கள். மேலும் பலர் இந்நாளில் தங்கள் வீட்டில் விரதமிருந்து வழிபாடுகளை மேற்கொள்வார்கள். குறிப்பாக குழந்தை பேறு வேண்டி வழிபடுபவர்கள் விரதமிருந்து வேண்டினால் அடுத்த வருடம் வீட்டில் குட்டி கிருஷ்ணர் பிறப்பார் என்பது ஐதீகமாக உள்ளது.
(ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் உள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை)