
Spiritual Events
ஆன்மிக நிகழ்வுகள்
இந்தியா பல்வேறு மதங்களை பின்பற்றும் மக்களை கொண்ட ஒரு மதச்சார்பற்ற நாடு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இங்கு திரும்பும் திசை எங்கும் பல்வேறு மதங்களைச் சார்ந்த வழிபாட்டுத்தலங்கள் இருப்பதை நாம் காணலாம். ஒரு வருடத்தை எடுத்துக் கொண்டால் 365 நாட்கள் இருக்கிறது. இந்த 365 நாட்களும் சாஸ்திரங்களின்படியும், புராணங்களின்படியும், ஒவ்வொரு மத வரலாற்றின் படியும் ஏதேனும் ஒரு விசேஷ நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. கடவுள் அவதரித்த நாள் தொடங்கி பகைவர்களை அழித்த நாள் வரை இங்கு பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு மாதம் எடுத்துக் கொண்டால் வளர்பிறையில் 15 திதிகளும், தேய்பிறையில் 15 திதிகளும் வருகிறது. அதேபோல் ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும் இத்தகைய திதிகளில் விசேஷ நாட்களும் வருகிறது. அப்படியாக ஆன்மீகத்தில் ஒவ்வொரு நாளும் வரும் விசேஷ தினங்கள், அவற்றின் வரலாறு, கடவுள் வழிபாட்டு முறைகள், விரத முறைகள், பரிகாரங்கள் உள்ளிட்ட பல தகவல்களை நாம் இங்கு காணலாம்
Guru Peyarchi 2025: குருபெயர்ச்சி 2025 எப்போது?.. மேஷ ராசிக்கான பலன்கள் இதோ!
2025-ம் ஆண்டு மே மாதம் குரு பெயர்ச்சி ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு நடைபெறுகிறது. இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு மூன்றாம் இடத்தில் குருவின் இருப்பு நல்ல பலன்களைத் தரும். திருமணத் தடைகள் நீங்கும், தொழில் வளர்ச்சி அமையும். பணியிடத்தில் உயர்வு, வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.
- Petchi Avudaiappan
- Updated on: May 1, 2025
- 08:42 am
2025 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி எப்போது? – அதன் சிறப்புகள் இதோ!
சித்ரா பௌர்ணமி, இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் பண்டிகையாகும். சித்திரை மாத பௌர்ணமியான இந்நாள், சித்ரகுப்தன் பிறந்தநாளாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் வழிபாடு செய்வதால் பாவங்கள் குறைந்து புண்ணியங்கள் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த விசேஷ தினத்தில் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், வீடுகளில் விசேஷ வழிபாடுகளும் நடைபெறும்.
- Petchi Avudaiappan
- Updated on: May 1, 2025
- 08:43 am
சித்ரா பௌர்ணமி.. கள்ளழகர் திருவிழா.. மே மாதத்தின் முக்கிய ஆன்மிக நிகழ்வுகள்!
மே மாதம் பல முக்கியமான ஆன்மிக நிகழ்வுகள் உள்ளது. இந்த மாதம் ஏராளமான சுப நாட்கள் மற்றும் கிரகப் பெயர்ச்சிகளைக் கொண்டுள்ளது. சித்திரை, வைகாசி மாதங்களின் சுபமுகூர்த்தம், அக்னி நட்சத்திரம், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல், ராகு-கேது மற்றும் குரு பெயர்ச்சிகள் போன்ற முக்கிய நிகழ்வுகள் இந்த மாதத்தில் நடைபெறுகின்றன
- Petchi Avudaiappan
- Updated on: May 1, 2025
- 08:43 am
மதுரை சித்திரை திருவிழா.. கொடியேற்றம் முதல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் வரை!
2025 ஏப்ரல் 29 முதல் மே 17 வரை மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது. கொடியேற்றம், பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் வைபவம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளின் தேதி, நேரம் ஆகியவை பற்றி பார்க்கலாம். இந்த திருவிழா தென்மாவட்டங்களின் மிக முக்கிய ஆன்மிக நிகழ்வாகும்.
- Petchi Avudaiappan
- Updated on: May 1, 2025
- 08:44 am