Spiritual Events: செப்டம்பர் மாதத்தின் முக்கிய ஆன்மிக விசேஷ தினங்கள்!
2025 செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் நடைபெறும் முக்கியமான ஆன்மீக விழாக்கள் மற்றும் நிகழ்வுகளைப் பற்றிக் காணலாம். மிலாடி நபி, ஓணம், மஹா பரணி, மஹாளய அமாவாசை, நவராத்திரி போன்ற முக்கிய நிகழ்வுகளின் இம்மாதத்தில் வருகின்றது. அதுமட்டுமல்லாமல் ஆன்மிக மாதமாக அறியப்படும் புரட்டாசியும் வருகை தருவது கூடுதல் சிறப்பாகும்.

செப்டம்பர் மாதம் ஆன்மிகத்தை பொறுத்த மட்டில் மற்றுமொரு சிறந்த மாதமாக சொல்லலாம். ஆவணி மாதத்தின் பிற்பகுதி, புரட்டாசி மாதத்தின் முற்பகுதி என கலந்து வரும் இந்த காலக்கட்டத்தில் பல்வேறு விதமான நிகழ்வுகள் நடைபெறும். அதில் 2025 ஆம் ஆண்டை எடுத்துக் கொண்டால் செப்டம்பர் மாதத்தில் மிலாடி நபி, ஓணம் பண்டிகை, மஹா பரணி, தேவ மாதா பிறந்த நாள், மஹாளய அமாவாசை, ஆவணி மாத பௌர்ணமி, புரட்டாசி சனிக்கிழமை, நவராத்திரி திருவிழா தொடக்கம் என ஏகப்பட்ட நிகழ்வுகள் நடைபெறுகிறது. இப்படியான நிலையில் இந்த மாதத்தின் முக்கிய விசேஷ தினங்களை நாம் தேதி, கிழமை வாரியாக பார்க்கலாம்,
செப்டம்பர் மாத விசேஷ தினங்கள்
- செப்டம்பர் 1 – ஆவணி 16 – திங்கட்கிழமை – வளர்பிறை நவமி
- செப்டம்பர் 2 – ஆவணி 17 – செவ்வாய்கிழமை – வளர்பிறை தசமி
- செப்டம்பர் 3 – ஆவணி 18 – புதன்கிழமை – வளர்பிறை ஏகாதசி
- செப்டம்பர் 4 – ஆவணி 19 – வியாழக்கிழமை – வளர்பிறை துவாதசி / சுப முகூர்த்தம்
- செப்டம்பர் 5 – ஆவணி 20 – வெள்ளிக்கிழமை – மிலாடி நபி / ஓணம் பண்டிகை/ டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள்/ பிரதோஷம்
- செப்டம்பர் 7 – ஆவணி 22 – ஞாயிற்றுக்கிழமை – பௌர்ணமி
- செப்டம்பர் 8 – ஆவணி 23 – திங்கட்கிழமை – தேவமாதா பிறந்தநாள் / தேய்பிறை பிரதமை
- செப்டம்பர் 10 – ஆவணி 26 – புதன்கிழமை – சங்கடஹர சதுர்த்தி
- செப்டம்பர் 12 – ஆவணி 27 – வெள்ளிக்கிழமை – தேய்பிறை பஞ்சமி / மஹா பரணி / தேய்பிறை கார்த்திகை விரதம்
- செப்டம்பர் 13 – ஆவணி 28 – சனிக்கிழமை – தேய்பிறை ஷஷ்டி விரதம் / கரிநாள்
- செப்டம்பர் 14 – ஆவணி 29 – ஞாயிற்றுக்கிழமை – சுபமுகூர்த்தம் / தேய்பிறை அஷ்டமி திதி நேரம் தொடக்கம் / தேய்பிறை ஸப்தமி
Also Read: Spiritual Events: செப்டம்பர் மாதத்தின் முக்கிய ஆன்மிக விசேஷ தினங்கள்!
- செப்டம்பர் 15 – ஆவணி 30 – திங்கட்கிழமை – தேய்பிறை அஷ்டமி முடிவு / தேய்பிறை நவமி / அறிஞர் அண்ணா பிறந்தநாள்
- செப்டம்பர் 16 – ஆவணி 31 – செவ்வாய்கிழமை – தேய்பிறை தசமி / எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்தநாள்
- செப்டம்பர் 17 – புரட்டாசி 1 – புதன்கிழமை – புரட்டாசி மாத பிறப்பு / தேய்பிறை ஏகாதசி / பிரதமர் மோடி பிறந்தநாள் / பெரியார் பிறந்த நாள்
- செப்டம்பர் 19 – புரட்டாசி 3 – வெள்ளிக்கிழமை – பிரதோஷம் / கஜகௌரி விரதம்
- செப்டம்பர் 20 – புரட்டாசி 4 – சனிக்கிழமை – மாத சிவராத்திரி / புரட்டாசி சனிக்கிழமை
- செப்டம்பர் 21 – புரட்டாசி 5 – ஞாயிற்றுக்கிழமை – மஹாளய அமாவாசை / மாஸா கௌரி விரதம்
- செப்டம்பர் 23 – புரட்டாசி 7 – செவ்வாய்கிழமை – சந்திர தரிசனம் / நவராத்திரி திருவிழா ஆரம்பம்
- செப்டம்பர் 25 – புரட்டாசி 9 – வியாழக்கிழமை- வளர்பிறை சதுர்த்தி
- செப்டம்பர் 27 – புரட்டாசி 11 – சனிக்கிழமை – வளர்பிறை பஞ்சமி / புரட்டாசி சனிக்கிழமை
- செப்டம்பர் 28 – புரட்டாசி 12 – ஞாயிற்றுக்கிழமை – வளர்பிறை ஷஷ்டி விரதம் / பகத்சிங் பிறந்தநாள்
- செப்டம்பர் 29 – புரட்டாசி 13 – திங்கட்கிழ்மை – வளர்பிறை ஸப்தமி
- செப்டம்பர் 30 – புரட்டாசி 14 – செவ்வாய்கிழமை – வளர்பிறை அஷ்டமி
இதையும் படிங்க: திருமண தடை நீக்கும் முப்பந்தல் இசக்கியம்மன் கோயில்!
(இக்கட்டுரையில் கொடுக்கப்பட்ட தகவல்கள் யாவும் தினசரி காலண்டரில் குறிப்பிட்டப்பட்டுள்ள பஞ்சாங்க நிகழ்வுகள் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை. இவற்றின் காலம், நேரம், திதி ஆகியவை மாற வாய்ப்புள்ளதால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது. எனவே விசேஷ நாட்களை பின்பற்றும் முன் ஒருமுறை அனைத்தையும் சரி பார்க்கவும்)