மும்பையில் எல்பிஜி வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சுமார் 20 சதவீத ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன என மும்பை ஹோட்டல் சங்கமான AHAR தெரிவித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த 2 முதல் 3 நாட்களில் 50 சதவீத ஹோட்டல்கள் வரை மூடப்பட வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்கள் எவ்வளவு காலம் இயங்கும் என்பது அவர்களிடம் இருக்கும் எரிவாயு கையிருப்பை பொறுத்தே இருக்கும் என AHAR கூறியுள்ளது. ஹோட்டல்களை மூடுவது குறித்து சங்கம் எந்த அதிகாரப்பூர்வ முடிவும் எடுக்கவில்லை