மலையாளத் திரையுலகின் இரு பெரும் துருவங்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இணைந்து நடிக்கும் 'பேட்ரியாட்' திரைப்படம், அதன் வெளியீட்டிற்கு முன்பே பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. படத்தின் வருவாய் பகிர்வு தொடர்பாகத் தயாரிப்பாளருக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, கேரளாவில் இப்படத்தைத் திரையிடப் போவதில்லை எனத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.