இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் உருவான 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் வில்லனாக, 'சுப்ரீம் யாகின்' என்ற கதாபாத்திரத்தில் நடித்த உலகநாயகன் கமல்ஹாசனின் நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது, இந்தப் படத்திற்காக அவர் வாங்கிய ஊதியம் குறித்த தகவல் இந்தியத் திரையுலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.