Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Aani Month: மாதப்பிறப்பு முதல் திருமஞ்சனம் வரை.. ஆனி மாதத்தின் முக்கிய தினங்கள்!

ஆனி மாதம், தமிழ் மாதங்களில் மூன்றாவது மாதமாகும். இந்த மாதத்தில் பல்வேறு முக்கிய பண்டிகைகள், விரதங்கள் மற்றும் சுப நாட்கள் வருகின்றன. அருணகிரிநாதர், பெரியாழ்வார் போன்றோரின் பிறந்தநாளும் இம்மாதத்தில் வருகிறது. நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்டம் போன்ற முக்கிய நிகழ்வுகளும் இம்மாதத்தில் நடைபெறுகின்றன.

Aani Month: மாதப்பிறப்பு முதல் திருமஞ்சனம் வரை.. ஆனி மாதத்தின் முக்கிய தினங்கள்!
ஆனி மாத விசேஷ தினங்கள்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 14 Jun 2025 11:11 AM

ஆனி மாத விசேஷ நாட்கள்: தமிழ் மாதங்களில் மூன்றாவது மாதமாக வருவது ஆனி ஆகும். சூரிய பகவான் ஜோதிட சாஸ்திரத்தின் படி இந்த காலகட்டத்தில் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பயணிப்பார். 31 நாட்கள், 36 நிமிடம், 38 வினாடி சூரிய பகவான் இந்த ஆனி மாதத்தில் மிதுன ராசியில் பிரவேசிப்பார். ஆனால் நாட்காட்டியின் படி 32 நாட்களாக கணக்கில் கொள்ளப்படுகிறது. இந்த ஆனி மாதம் பல்வேறு சிறப்புகள் நிறைந்தது. குறிப்பாக அருணகிரிநாதர், பெரியாழ்வார், நாதமுனிகள் ஆகியோர் பிறந்தது இந்த மாதத்தில் தான். மேலும் தென் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்ட திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஆனி மாதத்தில் நடைபெறும் முக்கிய விசேஷ தினங்கள், திதிகள் உள்ளிட்டவற்றை நாம் இந்த தொகுப்பில் காணலாம்

ஆனி மாத விசேஷ நாட்கள்

  •  ஆனி 1 – ஜூன் 15 – ஞாயிற்றுக்கிழமை – திருவோண விரதம், கரிநாள், தேய்பிறை சதுர்த்தி
  • ஆனி 2 – ஜூன் 16 – திங்கட்கிழமை – தேய்பிறை பஞ்சமி , சுபமுகூர்த்த தினம்
  • ஆனி 3 – ஜூன் 17 –  செவ்வாய்கிழமை – தேய்பிறை ஷஷ்டி
  • ஆனி 4 – ஜூன் 18 – புதன்கிழமை – தேய்பிறை அஷ்டமி
  • ஆனி 5 – ஜூன் 19 – வியாழக்கிழமை – தேய்பிறை நவமி
  • ஆனி 6 – ஜூன் 20 – வெள்ளிக்கிழமை – கரிநாள், தேய்பிறை தசமி
  • ஆனி 7 – ஜூன் 21 – சனிக்கிழமை – சர்வ ஏகாதசி
  • ஆனி 8 – ஜூன் 22 – ஞாயிற்றுக்கிழமை – கார்த்திகை விரதம், தேய்பிறை துவாதசி
  • ஆனி 9 – ஜூன் 23 – திங்கட்கிழமை – மாத சிவராத்திரி, பிரதோஷம்
  • ஆனி 10 – ஜூன் 24 – செவ்வாய்கிழமை  – தேய்பிறை சதுர்த்தசி
  • ஆனி 11 – ஜூன் 25 – புதன்கிழமை – ஸர்வ அமாவாசை
  • ஆனி 12 – ஜூன் 26 – வியாழக்கிழமை – வளர்பிறை பிரதமை / சந்திர தரிசனம்
  • ஆனி 13 – ஜூன் 27 – வெள்ளிக்கிழமை – சுபமுகூர்த்தம்
  • ஆனி 15 – ஜூன் 29 – ஞாயிற்றுக்கிழமை – வளர்பிறை சதுர்த்தி விரதம்
  • ஆனி 16 – ஜூன் 30 – திங்கட்கிழமை – வளர்பிறை பஞ்சமி

ஜூலை மாதத்தின் விசேஷ நாட்கள்

  • ஆனி 17 – ஜூலை 1-  செவ்வாய்கிழமை – வளர்பிறை ஷஷ்டி, ஆனி உத்திர அபிஷேகம்
  • ஆனி 18 – ஜூலை 2 – புதன்கிழமை – ஆனி உத்திர தரிசனம், தேவமாதா காட்சியருளிய நாள், சுபமுகூர்த்தம்
  • ஆனி 19 – ஜூலை 3 – வியாழக்கிழமை – வளர்பிறை அஷ்டமி
  • ஆனி 20 – ஜூலை 4  – வெள்ளிக்கிழமை – வளர்பிறை நவமி
  • ஆனி 21 – ஜூலை 5 – சனிக்கிழமை – வளர்பிறை தசமி
  • ஆனி 22 – ஜூலை 6 – ஞாயிற்றுக்கிழமை – சர்வ ஏகாதசி, மொஹரம் பண்டிகை
  • ஆனி 23 – ஜூலை 7 – திங்கட்கிழமை – சுபமுகூர்த்தம்
  • ஆனி 24 – ஜூலை 8 – செவ்வாய்கிழமை – பிரதோஷம்
  • ஆனி 25 – ஜூலை 9 – புதன்கிழமை – வளர்பிறை சதுர்த்தசி, காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா
  • ஆனி 26 – ஜூலை 10 – வியாழக்கிழமை – பௌர்ணமி
  • ஆனி 27 – ஜூலை 11 – வெள்ளிக்கிழமை – தேய்பிறை பிரதமை
  • ஆனி 28 – ஜூலை 12 – சனிக்கிழமை – திருவோண விரதம்
  • ஆனி 29 – ஜூலை 13 – ஞாயிற்றுக்கிழமை – தேய்பிறை சுபமுகூர்த்தம்
  • ஆனி 30 – ஜூலை 14 – திங்கட்கிழமை – தேய்பிறை சுபமுகூர்த்தம், சங்கடஹர சதுர்த்தி
  • ஆனி 31 – ஜூலை 15 – செவ்வாய்கிழமை – தேய்பிறை பஞ்சமி
  • ஆனி 31 – ஜூலை 16 – புதன்கிழமை – தேய்பிறை சுபமுகூர்த்தம், ஷஷ்டி விரதம்

(தினசரி காலண்டர் அடிப்படையில் இந்த தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. திதிகளின் நேரம் ஆகியவை மாறும் வாய்ப்புள்ளது. எனவே ஒருமுறை சம்பந்தப்பட்ட நாட்களை சரிபார்த்துக் கொள்வது நல்லது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

கார் வாங்கப்போறீங்களா? 5 சிறந்த ஆட்டோமேட்டிக் கார்கள் இதோ!
கார் வாங்கப்போறீங்களா? 5 சிறந்த ஆட்டோமேட்டிக் கார்கள் இதோ!...
விமான பயணத்தினால் பதட்டம் ஏற்படுகிறதா? இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க
விமான பயணத்தினால் பதட்டம் ஏற்படுகிறதா? இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க...
தேங்காய் எண்ணெய் யூஸ் பண்றீங்களா? இந்த 5 டிப்ஸை டிரை பண்ணுங்க!
தேங்காய் எண்ணெய் யூஸ் பண்றீங்களா? இந்த 5 டிப்ஸை டிரை பண்ணுங்க!...
திருமணம் குறித்த சர்ச்சை - முதல் முறையாக மனம் திறந்த அனிருத்!
திருமணம் குறித்த சர்ச்சை - முதல் முறையாக மனம் திறந்த அனிருத்!...
சாம்பியன் தென்னாப்பிரிக்காவுக்கு இவ்வளவு கோடியா..? முழு விவரம்!
சாம்பியன் தென்னாப்பிரிக்காவுக்கு இவ்வளவு கோடியா..? முழு விவரம்!...
ஸ்ரீலீலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பராசக்தி இயக்குநர்!
ஸ்ரீலீலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பராசக்தி இயக்குநர்!...
விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!
விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!...
மதுரையில் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய குற்றவாளி..
மதுரையில் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய குற்றவாளி.....
மதுரை- அபுதாபி முதல் விமானம் - தமிழில் பேசிய பைலட்
மதுரை- அபுதாபி முதல் விமானம் - தமிழில் பேசிய பைலட்...
பவுண்டரி எல்லை கேட்சில் புதிய மாற்றம்! இனி இது சட்டவிரோதம்..!
பவுண்டரி எல்லை கேட்சில் புதிய மாற்றம்! இனி இது சட்டவிரோதம்..!...
தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள்.. தெற்கு ரயில்வே..
தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள்.. தெற்கு ரயில்வே.....