ஜன நாயகன் படத்தில் கேமியோ செய்துள்ள லோகேஷ் கனகராஜ் – வைரலாகும் விடீயோ
Lokesh Kanagaraj in Jana Nayagan Movie: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது ஜன நாயகன் படத்தில் கேமியோ வேடத்தில் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜன நாயகன். தளபதி விஜய் நடித்துள்ள இந்தப் படம் கடந்த 09-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் படம் வெளியாவது தள்ளிப்போனது. இந்த நிலையில் இந்த ஜன நாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது படக்குழு. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைப்பெற்று வந்த நிலையில் நாளை 27-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் இந்த ஜன நாயகன் படம் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் பேசியுள்ளார்.
தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்துள்ளார். அதன்படி இவர்களின் கூட்டணியில் வெளியான மாஸ்டர் மற்றும் லியோ என இரண்டு படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஜன நாயகன் படம் குறித்து பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




ஜன நாயகன் படத்தில் கேமியோ செய்துள்ள லோகேஷ் கனகராஜ்:
அதன்படி அந்த விழாவில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குநர் எச். வினோத் மற்றும் நடிகர் விஜய் அண்ணா இருவரும் இணைந்து எனக்கு கால் செய்தனர். அப்போது கேமியோ செய்ய வேண்டும் ஜன நாயகன் படத்தில் என்று கேட்டார்கள். ஆமா நான் ஜன நாயகன் படத்தில் கேமியோ செய்துள்ளேன். அதற்குமேல் இதில் எதுவும் சொல்ல முடியாது என்றும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் குறித்து நெகிழ்ந்து பேசிய பாடகி ஸ்வேதா மோகன்
இணையத்தில் வைரலாகும் லோகேஷ் கனகராஜின் பேச்சு:
#LokeshKanagaraj Recent
– #HVinoth anna and #Vijay anna called me One day.
– I did a Cameo, that’s all I can say.#AlluArjun #JanaNayaganpic.twitter.com/EmELbj8xb8— Movie Tamil (@_MovieTamil) January 26, 2026
Also Read… காலு மேல காலு போடு ராவண குலமே… திரையரங்குகளில் வெளியாகி இரண்டு ஆண்டுகளைக் கடந்தது ப்ளூ ஸ்டார் படம்!