AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஓடிடியில் வெளியாகியுள்ள மேட் இன் கொரியா படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

Priyanka Mohan's Made In Korea Movie Reive Here: நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகி தற்போது நேரடியாக ஓடிடியில் வெளியாகி உள்ள படம் மேட் இன் கொரியா. இந்தப் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

ஓடிடியில் வெளியாகியுள்ள மேட் இன் கொரியா படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
மேட் இன் கொரியாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Mar 2026 22:02 PM IST

கன்னட சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை பிரியங்கா மோகன். இவரது நடிப்பில் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி உள்ள படம் மேட் இன் கொரியா. இந்தப் படத்தினை இயக்குநர் ரா கார்த்தி எழுதி இயக்கி இருந்தார். இதில் நடிகை பிரியங்கா மோகன் உடன் இணைந்து நடிகர்கள் ரியா மனோஜ், பார்க் ஹை-ஜின், சி-ஹன் பேக், ரிஷிகாந்த், ஹா-ராம் ஜோ, ஜெய்-ஹியோன் ஜாங், சோரி கிம், ரோக் கிம், மின்-சியோக் ஜங், திருநாவுக்கரசு, ஜென்சன் திவாகர், ஜெயா என பலர் இந்தப் படத்தில் முக்கிய வெடத்தில் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தை ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர்கள் ஹெஷாம் அப்துல் வஹாப், சைமன் கே. கிங் மற்றும் தரன் குமார் ஆகியோர் இணைந்து இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் கடந்த 12-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. இந்த நிலையில் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

மேட் இன் கொரியா படத்தின் கதை என்ன?

ஒரு சிரிய கிராமத்தில் பிறந்த செண்பா என்ற கதாப்பாத்திரத்தில் நடிகை பிரியங்கா மோகன் நடித்து இருந்தார். பள்ளியில் படிக்கும் போது தமிழகத்தில் இருந்து கொரியாவிற்கு சென்று அங்க ராணியாக இருந்தவரின் வேசத்தை ஃபேன்சி ட்ரெஸ் காம்படிஷனில் போடுகிறார். அப்போது அந்தப் போட்டியில் அவர் வெற்றியையும் அடைந்தார். அதனைத் தொடர்ந்து கொரியா மீது அவருக்கு மிகுந்த ஆர்வம் வருகிறது. அப்போது இருந்தே கொரியா செல்ல வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார்.

செண்பாவிற்கு சிறு வயதில் இருந்து கொரியா எவ்வளவு பிடிக்குமோ அதே அளவிற்கு அவரது பள்ளி நண்பன் மணியையும் பிடிக்கும். பள்ளியில் நண்பர்களாக இருந்த இவர்கள் பிறகு காதலிக்க தொடங்குகின்றனர். இவர்களின் காதலுக்கு பிரியங்கா மோகனின் தந்தை எதிர்ப்பு தெரிவிக்க வீட்டைவிட்டு வெளியேறுகிறார்கள்.

அப்படி வெளியேறியபோது கொரியாவில் செண்பாவிற்கு வேலை கிடைத்துவிட்டது என்று கூறி இருவரும் அங்கே செல்வோம் என்று மணி கூறுகிறார். இறுதியில் விமானத்தில் ஏறியபிறகே செண்பாவிற்கு மணி தன்னை ஏமாற்றிவிட்டார் என்பது தெரிகிறது. அதனைத் தொடர்ந்து தனியாக கொரியாவிற்கு செல்லும் செண்பா அங்கு எப்படி எல்லாம் வாழ்ந்தார் என்பதே படத்தின் கதை.

Also Read… Sai Pallavi: அந்த படத்தின் ஷூட்டிங்கை விடவும்.. டப்பிங்கிற்கு ரொம்ப கஷ்டப்பட்டேன் – சாய் பல்லவி ஓபன் டாக்!

ஏமாற்றத்தை அளித்ததா மேட் இன் கொரியா?

இந்தப் படத்தை இயக்கிய ரா கார்த்திக் இயக்கத்தில் முன்னதாக வெளியான நித்தம் ஒரு வானம் படம் மிகவும் அருமையாக இருக்கும். அந்தப் எதிர்பார்ப்பில் மேட் இன் கொரியா படத்தைப் பார்த்தால் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாகவே இருக்கும் இந்த மேட் இன் கொரியா. படத்தில் பல எரர்கள் உள்ளது.

சிறு வயதில் இருந்தே கொரியா போக வேண்டும் என்று நினைக்கும் செண்பாவிற்கு கொரியாவின் அடிப்படை கலாச்சாரம் கூட தெரியாததும், அங்கு மக்கள் எப்படி வாழ்வார்கள் என்பதும் தெரியாமல் இருக்கிறார். இப்படி படத்தில் உள்ள குறைகளை கூறவேண்டும் என்றால் அடுக்கிக்கிகொண்டே போகலாம்.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மேட் இன் கொரியாவை பார்க்க நினைத்தால் ஒருமுறை பார்க்கலாம். இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… விடுதலை படத்தின் ஷூட்டிங்கிலேயே வெற்றிமாறன் அரசன் படத்தின் கதையை கூறினார் – விஜய் சேதுபதி சொன்ன விசயம்

Follow Us