AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sai Pallavi: அந்த படத்தின் ஷூட்டிங்கை விடவும்.. டப்பிங்கிற்கு ரொம்ப கஷ்டப்பட்டேன் – சாய் பல்லவி ஓபன் டாக்!

Sai Pallavi About Dubbing Difficulties: பான் இந்திய சினிமாவில் லீட் கதாநாயகியாக பிரபலமாகிவருபவர் சாய் பல்லவி. இவர் இந்தி மொழிகளிலும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ள நிலையில், இவரின் தரம் உயர்ந்துள்ளது. அந்த வகையில் இவர் முன்னதாக நேர்காணல் ஒன்றில் ஒரு படத்தின் ஷூட்டிங்கை விடவும், டப்பிங்கிற்காக கஷ்டப்பட்டது பற்றி தெரிவித்துள்ளார்.

Sai Pallavi: அந்த படத்தின் ஷூட்டிங்கை விடவும்.. டப்பிங்கிற்கு ரொம்ப கஷ்டப்பட்டேன் – சாய் பல்லவி ஓபன் டாக்!
சாய் பல்லவிImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 15 Mar 2026 08:41 AM IST

நடிகை சாய் பல்லவி (Sai Pallavi) தற்போது பான் இந்திய பிரபல நடிகையாக வலம்வருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவிலும் தொடர்ந்து மிக பிரம்மாண்ட படங்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்துவந்த இவர், தற்போது இந்தி சினிமாவில் கால் பதித்துள்ளார். நடிகர் ஆமிர்கானின் தயாரிப்பிள், ஜுனைத் கான் நாயகனாக நடிக்கும் “ஏக் தின்” (Ek Din) என்ற படத்தின் மூலம், பாலிவுட் சினிமாவில் கதாநாயகியாக நுழைந்துள்ளார். இந்த படமானது முற்றிலும் காதல் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை தூண்டி வருகிறது. மலையாள சினிமாவின் மூலம் கதாநாயகியாக நுழைந்த இவர், தற்போது பான் இந்திய மக்கள் வரை பிரபலமாகியுள்ளார்.

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் இவருக்கு பல ஹிட் படங்கள் உள்ளது. அந்த வகையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த சாய் பல்லவி, அதில் அமரன் (Amaran) படத்தின் டப்பிங்கில் பட்ட கஷ்டம் குறித்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கெணத்த காணோம் படத்திலிருந்து வெளியானது ஸ்னீக் பீக் வீடியோ

அமரன் திரைப்படத்தில் தான் சந்தித்த கஷ்டம் குறித்து சாய் பல்லவி :

அந்த நேர்காணலின் போது பேசிய சாய் பல்லவி, “நான் மலையாளத்தில் பிரேமம் படத்தில் தமிழ் பெண்ணாக நடித்தேன், அமரன் படத்தில் மலையாள பெண்ணாக நடித்திருந்தேன். பிரேமம் படம் பண்ணும்போது எனக்கு பெரிதாக எதுவும் தெரியவில்லை, ஏனென்றால் அதில் நான் தைல பெண். ஆனால் அமரன் படத்தில் நானா மலையாள பெண்.

இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்தில் நடிக்க என் சுயநலம் தான் காரணம் – விஜய் சேதுபதி ஓபன் டாக்

எனக்கு மலையாளம் அவ்வளவாக பேச தெரியாது. அந்த வகையில் நான் பேசும் மலையாளம் தமிழ் மக்களுக்கும் புரியவேண்டும். ந்த விதத்தில் எனக்கு மலையாளம் பேசுவது சிக்கல் இருந்தது. அமரன் பட ஷூட்டிங்கில் கோட்ட நா அவ்வளவு கஷ்டப்படவில்லை. ஆனால் அதன் டப்பிங் போது எனக்கு அதிக கஷ்டமாக இருந்தது” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

நடிகை சாய் பல்லவியின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Sai Pallavi (@saipallavi.senthamarai)

நடிகை சாய் பல்லவி தற்போது தமிழில் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் டி55 படத்தில் இணைந்துள்ளார். இதில் நடிகர் தனுஷுடன் இணைந்து நடிக்கிறார். ஏற்கனவே மாரி 2 படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், 2வது முறையாக இணைந்து நடிக்கவுள்ளார். இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திலும் சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்தவருகிறதாம். தொடர்ந்து தற்போது இந்தி மற்றும் தமிழ் மொழியில் நடிக்க கவனம் செலுத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us