ஜெயிலர் 2 படத்தில் நடிக்க என் சுயநலம் தான் காரணம் – விஜய் சேதுபதி ஓபன் டாக்
Actor Vijay Sethupathi talks about working with Rajinikanth in Jailer movie: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இவர் நாயகனாக பலப் படங்களில் நடித்தாலும் தொடர்ந்து வில்லன் மற்றும் சிறப்பு கதாப்பத்திரங்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தின் முதல் பாகத்திலேயே பல மொழிகளில் இருந்து முன்னணி நடிகர்கள் கேமியோ வேடத்தில் நடித்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதே போல தற்போது ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் பலர் கேமியோ வேடத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் தொடர்பாகவும் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் தொடர்ந்து பேட்டிகளில் பேசி வருவதும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த ஜெயிலர் 2 படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் படத்தை தயாரித்து வருகிறார். அதன்படி முதல் பாகம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல இரண்டாவது பாகமும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தில் நடித்தது குறித்து நடிகர் விஜய் சேதுபதி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




ஜெயிலர் 2 படத்தில் நடிக்க என் சுயநலம் தான் காரணம்:
இந்தப் படத்தில் எனக்கு இருந்தது வெறும் ஒரு நாள் வேலை மட்டுமே. ரஜினி சாருடன் பணியாற்ற வேண்டும் என்ற தனிப்பட்ட விருப்பத்தினால், ஒருவித சுயநலத்துடனேயே நான் இந்தப் படத்தில் நடித்தேன். ரஜினி சாருக்கு 70 வயதுக்கும் மேல் ஆகிறது. இருப்பினும், 6 வயதுச் சிறுவர்கள் கூட அவருக்கு ரசிகர்களாக உள்ளனர். “உன் மகனும் பேரனும் ஆட்டம் போட வைத்தவன்” என்ற அந்தச் சிறப்பான வரிகள் அவருக்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தும்.
அவரது கலைப்பணி தலைமுறைகளைக் கடந்து நிற்கிறது. நான் பெரிதும் வியந்து போற்றும் அந்த ‘சூப்பர்ஸ்டார்’, இன்றும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டே இருக்கிறார். அவருடன் மிக நெருக்கமாகப் பணியாற்றும் தருணங்களில், அவரது கடின உழைப்பையும், அவர் எடுத்துக்கொள்ளும் பொறுப்புணர்வையும் என்னால் கண்கூடாகக் காண முடிகிறது என்றும் விஜய் சேதுபதி அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார். இது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… உலக அளவில் ரீ ரிலீஸாகும் ரன்வீர் சிங்கின் துரந்தர் படம் – எப்போது தெரியுமா?
இணையத்தில் வைரலாகும் விஜய் சேதுபதியின் பேச்சு:
#VijaySethupathi about #Jailer2 ⭐:
• It was just a one-day work for me in the film..🤝 I did this film out of selfishness, because I wanted to work with Rajini sir..❣️
• Rajini sir is 70+ years old, yet he even has fans as young as 6 years old.. “Un mavanum peranum aatam… pic.twitter.com/g10uncdWdC
— Laxmi Kanth (@iammoviebuff007) March 14, 2026
Also Read… பாடகி ஸ்ரேயா கோஷல் பர்த்டே ஸ்பெஷல்… ஜெய் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு