ஜிவி பிரகாஷ் குமாரின் ஹேப்பி ராஜ் படம் எப்படி இருக்கு? வெளியானது முதல் விமர்சனம்
Happy Raj Movie First Review Out Now: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் பிசியாக வலம் வருகிறார் ஜிவி பிரகாஷ் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா முழுவதும் பிரபலமாக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ் குமார். இவர் தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் பிசியான இசையமைப்பாளராக வலம் வருகிறார். இவரது இசையில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறுவது மட்டும் இன்றி விருதுகளையும் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இசையமைப்பாளராக பிசியாக இருக்கும் ஜிவி பிரகாஷ் குமார் தொடர்ந்து படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் சின்ன சின்ன வேடங்களில் கேமியோ எண்ட்ரி கொடுத்து வந்த ஜிவி பிரகாஷ் பிறகு நாயகனாக தொடர்ந்து நடிக்கத் தொடங்கினார். இசையமைப்பாளராக இவரை ஏற்றுக்கொண்ட ரசிகர்கள் நாயகனாகவும் ஏற்றுக் கொண்டு அவரது படங்களை திரையரங்குகளில் கொண்டாடத் தொடங்கினர் ரசிகர்கள்.
தொடர்ந்து இசை, நடிப்பு என இரண்டிலும் பிசியாக இருந்து வரும் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வருடத்திற்கு ஒரு படமாவது வெளியாவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஹேப்பி ராஜ். இந்தப் படம் வருகின்ற மார்ச் மாதம் 27-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளியாகி உள்ளது.




ஹேப்பி ராஜ் படத்தின் முதல் விமர்சனம் வெளியானது:
ஹேப்பி ராஜ் படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீங்கை பார்த்தவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது, முதல் பாதியில் வேடிக்கையும், இரண்டாம் பாதியில் உணர்ச்சிப்பூர்வமான நகைச்சுவையும் நிறைந்துள்ளது ஹேப்பி ராஜ் படம். நடிகர்கள் ஜி.வி. பிரகாஷ், கௌரி பிரியா மற்றும் அப்பாஸ் ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் ஜார்ஜ் மரியன் ஒட்டுமொத்த ஷோவையும் கவர்கிறார். தந்தை – மகன் செண்டிமெண்டு மிகச் சிறப்பாக உள்ளது. 2K மற்றும் ஜென் ஜி குழந்தைகள் இந்தப் படத்தில் உணர்ச்சி ரீதியாக அதிகம் இணைவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… தாய் கிழவி படத்தின் வெற்றியால் தள்ளிப்போன சேயோன் பட ஷூட்டிங் – சிவகார்த்தியேன் ஓபன் டாக்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Watched the special screening of #HappyRaj
Fun-filled first half and fun and emotional second half
G.V. Prakash, Gauri Priya & Abbas 👌🏻👌🏻George Mariyan steals the show 💥
The father–son emotion works very well.
2K and Gen Z kids will emotionally connect more in this film.… pic.twitter.com/nMmw6Mi42P— Karthik Ravivarma (@Karthikravivarm) March 11, 2026
Also Read… சூர்யா 47 படத்தில் கேமியோ தோற்றத்தில் பிரபல தமிழ் நடிகர்… வைரலாகும் தகவல்