விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் தனுஷ் 55 படம்… சென்னையில் தொடங்கியது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு!
Actor Dhanush 55 Movie Shooting Update: தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தற்போது 55-வது படம் உருவாகி வரும் நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து 3 படங்கள் திரையரங்குகளில் வெளியானது. அப்படி வெளியான மூன்று படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களை தொடர்ந்து இந்த 2026-ம் ஆண்டிலும் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. அதன்படி வருகின்ற 30-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் 54-வது படமாக உருவாகி உள்ள கர படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதில் இருந்து ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் படம் தனுஷ் 55. இந்தப் படத்தினை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக நடிகர் மம்முட்டி இந்தப் படத்தில் நடிக்க உள்ளது ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.




சென்னையில் தொடங்கியது தனுஷ்55 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு:
இந்த நிலையில் தனுஷ் 55 படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் அடுத்ததாக இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தற்போது நடைப்பெற்று வருகின்றது. அதன்படி சென்னையில் உள்ள ஈசிஆர் பகுதியில் தனுஷின் 55-வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. அதன்படி இந்த இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் நடிகர்கள் தனுஷ் மற்றும் மம்முட்டியின் போர்ஷன் படமாக்கப்பட உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் செப்டம்பர் மாதற்குள் முழுவதுமாக முடிவடையும் என்றும் தெரிவித்துள்ளனர்.
Also Read… ஜன நாயகன் படத்தின் ரிலீஸில் தீவிரம் காட்டும் படக்குழு…
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#D55 – Second Schedule Shoot is Currently Happening in ECR..⭐ #Mammootty is said to be part of this schedule..💥
• #Dhanush will complete this film by September and move to #D56 – A Grand Historical fantasy film with #Mariselvaraj..🤝
• #D57 with Thamizharasan Pachamuthu -… pic.twitter.com/crK2xNTrjh
— Laxmi Kanth (@iammoviebuff007) March 12, 2026
Also Read… ஸ்வீட் சர்ப்ரைஸ் ஆன் தி வே… போஸ்டர் வெளியிட்டு எதிர்பார்ப்பை தூண்டிய Hi படக்குழு