மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி… தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் ஜிவி பிரகாஷ் குமார்?
Actor Dhanush and music director G.V.Prakash Kumar collabrate for new movie: தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் இணைந்து பணியாற்றிய தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் குமார் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் படு பிசியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து 3 படங்கள் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படங்கள் அனைத்தும் அசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த 2026-ம் ஆண்டிலும் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது அவரது உருவாகி உள்ள கர படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 30-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் தனுஷின் நடிப்பில் 54-வது படமாக உருவாகி உள்ள நிலையில் இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் தனது 55-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. இதில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் மம்முட்டி, ஸ்ரீலீலா மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடித்து வருகின்றனர்.




9-வது முறையாக இணையும் நடிகர் தன்ஷ் – ஜிவி பிரகாஷ் கூட்டணி:
தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் தனது 56-வது படத்திற்காக இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து உடன் கூட்டணி வைத்துள்ளார். இந்தப் படத்தின் ப்ரீ புரடெக்ஷன் பணிகள் விருவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் மற்றும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் தற்போது இந்தப் படஹ்ட்திற்காக நடிகர் தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் கூட்டணி இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இவர்களின் கூட்டணி இந்தப் படத்தின் மூலமாக 9-வது முறையாக கூட்டணி வைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… R Parthiban: கோடிட்ட இடங்களை நீங்கள் நிரப்புவதற்குள்.. திரிஷா குறித்து பார்த்திபன் பகிர்ந்த வீடியோ!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Update on #D56 :
Actor #Dhanush and music director G.V.Prakash Kumar are likely to reunite for the 9th time in #D56🎶🔥.
Earlier, discussions were reportedly held with Anirudh Ravichander, Santhosh Narayanan, and Sai Abyankar for D56.
Now, G.V. Prakash has a strong chance of… pic.twitter.com/LrXx4KV7oQ
— FilmyBowl Tamil (@FilmyBowlTamil) March 9, 2026