சப்பையும் ஒரு ஆம்பளதான்… எல்லா ஆம்பளையும் சப்பைதான் – ரீ ரிலீஸாகும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற ஆரண்ய காண்டம்
Thiagarajan Kumararaja Aaranya Kaandam Movie Re-Release Update: தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் ஆரண்ய காண்டம். இந்தப் படம் தற்போது மீண்டும் ரீ ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு சார்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் தற்போது இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா நடிகர் விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்கி வருகிறார். பாக்கெட் நாவல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் தியாகராஜன் குமாரராஜா இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமான ஆரண்ய காண்டம் படத்தை ரீ ரிலீஸ் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்குநரகா அறிமுகம் ஆன இந்தப் படத்தினை பாடகரும் தயாரிப்பாளருமான எஸ்.பி.பி. சரண் தனது கேபிடல் ஃபிலிம் ஒர்க்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார்.
மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் ஜாக்கி ஷெராஃப், ரவி கிருஷ்ணா, சம்பத் ராஜ், யாஸ்மின் பொன்னப்பா, குரு சோமசுந்தரம், மாஸ்டர் வசந்த், குத்துச்சண்டை வீரர் ஆறுமுகம், சாய் தீனா, அஜய் ராஜ், ஜெயஸ்ரீ, ஷாகுல் மாஸ்டர், சுகுந்தன், அலெக்ஸ், ரமேஷ், தினேஷ் சுப்பராயன், கே.கார்த்திகேயன், புதுப்பேட்டை சுரேஷ், ஃபை ஸ்டார் கிருஷ்ணா என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




ரீ ரிலீஸாகும் ஆரண்ய காண்டம் படம்… உற்சாகத்தில் ரசிகர்கள்:
அதன்படி இந்த ஆரண்ய காண்டம் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.பி.பி. சரண் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, கேட்டுக்கொண்டே இருந்த அனைவருக்கும். சில படங்கள் வயதாகாது, அவை ஒரு பாரம்பரிய திரைப்படமாக மாறும். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட, தேசிய விருது பெற்ற ஆரண்ய காண்டம் மார்ச் 13 அன்று பெரிய திரைக்கு வருகிறது
திங்க் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… Texla Movie: ஜெய் – சுராஜ் வெஞ்சாரமூடு நடிக்கும் டெக்ஸ்லா.. வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!
தயாரிப்பாளர் எஸ்.பி.பி. சரண் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
For everyone who kept asking.
Some films don’t age, they become cult classic 🔥 The critically acclaimed, National Award-winning #AaranyaKaandam returns to big screen March 13
Tamil Nadu theatrical release by @ThinkStudiosInd pic.twitter.com/FaDvTOegRp— S. P. Charan (@charanproducer) March 7, 2026
Also Read… Youth Movie: லவ்.. லவ்…லவ்… கென் கருணாஸின் ‘யூத்’ திரைப்பட ட்ரெய்லர் வெளியானது!