AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாக்கெட் நாவல் படத்தின் ரிலீஸ் எப்போது? இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்

Thiagarajan Kumararaja Talks About Pocket Novel Movie: தமிழ் சினிமாவில் மக்களிடையே பிரபல இயக்குநராக வலம் வருபவர் தியாகராஜன் குமாரராஜா. இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் பாக்கெட் நாவல். இந்தப் படம் குறித்து சமீபத்தில் அவர் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பாக்கெட் நாவல் படத்தின் ரிலீஸ் எப்போது? இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்
விஜய் சேதுபதி மற்றும் தியாகராஜன் குமாரராஜாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Feb 2026 14:53 PM IST

தமிழ் சினிமாவில் வித்யாசமான கதைகளை மையமாக வைத்து படங்களை இயக்கியதன் காரணமாக மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருபவர் இயக்குநர் தியாகராஜன் குமாராஜா. இவர் தமிழ் சினிமாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் இயக்குநராக வலம் வருகின்றார். அதன்படி கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ஆரண்ய காண்டம் என்ற கேங்ஸ்டர் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே  இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் இரண்டாவதாக திரையரங்குகளில் வெளியான படம் சூப்பர் டீலக்ஸ். இந்தப் படம் கடந்த 2019-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. முதல் படத்தில் இருந்து மொத்தம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இரண்டாவது படம் வெளியானது.

அதன்படி 8 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து மீண்டும் தற்போது இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா அவரது மூன்றாவது படத்திற்காகவும் நடிகர் விஜய் சேதுபதி உடன் கூட்டணி வைத்தார். இது தொடர்பான அறிவிப்பு மற்றும் டைட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது.

பாக்கெட் நாவல் படத்தின் ரிலீஸ் எப்போது?

இந்த நிலையில் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் பாக்கெட் நாவல் படம் குறித்தும் படத்தின் வெளியீடு எப்போது இருக்கும் என்பது குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார். அதன்படி அந்தப் பேட்டியில் தியாகராஜன் குமாரராஜா பேசியதாவது, பாக்கெட் நாவல் படத்தின் இசையமைப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இடையில் சிறிய இடைவெளிகளுடன் சில அட்டவணையில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளோம். தற்போதைய நிலவரப்படி, படத்தை 2026 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

மேலும் இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதையை லீலை, கொலைகாரன் மற்றும் வதந்தி போன்ற படங்களின் மூலம்மிகவும் பிரபலமான இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் எழுதியுள்ளார். மேலும் படத்தின் கேமெரா பணியை நிரவ் ஷா பார்க்கின்ற நிலையில் பாடல் வரிகளை பாடலாசிரியர் யுகபாரதி படத்திற்கு பாடலை எழுதியுள்ளார் என்றும் தியாகராஜன் குமாரராஜா தெரிவித்துள்ளார்.

Also Read… WIth Love: வித் லவ் பட தயாரிப்பாளர்களை நேரில் அழைத்து வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இணையத்தில் கவனம் பெறும் தியாகராஜன் குமாரராஜா பேச்சு:

Also Read… Happy Raj: ‘ஆடினே இருப்பேன்’.. ஜி.வி. பிரகாஷ் குமாரின் ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் முதல் சிங்கிள் இதோ!