AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஸ்டேஜ்லயே உக்காந்துற வேண்டியதுதானே – பார்த்திபனை கிண்டல் செய்த சாய் பல்லவி!

Parthiban Shared Sai Pallavis Humor on X Post: சாய் பல்லவி சமீபத்தில் தமிழக அரசின் சார்பாக நடந்தப்பட்ட திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பார்த்திபனை சாய் பல்லவி கிண்டல் செய்தது குறித்த சம்பவத்தை, பார்த்திபனே தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஸ்டேஜ்லயே உக்காந்துற வேண்டியதுதானே – பார்த்திபனை கிண்டல் செய்த சாய் பல்லவி!
ஆர். பார்த்திபன் மற்றும் சாய் பல்லவிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 16 Feb 2026 12:55 PM IST

கோலிவுட் சினிமாவில் சிறந்த இயக்குநராகவும், நடிகர்களில் ஒருவராகவும் இருந்துவருபவர் ஆர்.பார்த்திபன் (R.Parthiban). இவர் தமிழில் தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் சிறப்பு வேடத்தில் நடித்துவருகிறார். இவர் இறுதியாக தமிழில் தனுஷின் (Dhanush) நடிப்பில் வெளியான இட்லி கடை (Idli Kadai) என்ற படத்தில், போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த விதத்தில் இவர் தற்போது தெலுங்கு திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். நடிகர் பவன் கல்யாணின் (Pawan Kalyan) நடிப்பில் உருவாகியுள்ள உஸ்தாத் பகத் சிங் (Ustaad Bhagat Singh) என்ற படத்தில், முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்.பார்த்திபன் நடித்துள்ளார். மேலும் இவர் சமீபத்தில் தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்ட, திரைப்பட விருது (Tamil Nadu Film Awards) வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 10 விருதுகளை நடிகர் பார்த்திபன் பெற்றிருந்தார். இயக்குநர், சிறந்த குணச்சித்திர நடிகர் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளைப் பெற்றிருந்தார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின்போது, அவரின் அருகில் நடிகை சாய் பல்லவி (Sai Pallavi) அமர்ந்திருந்த நிலையில், ஆர்.பார்த்திபனை சாய் பல்லவி கிண்டல் செய்துள்ளார். இது குறித்து தனது தனது பாணியில் நடிகர் ஆர்.பார்த்திபன் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: 40 நாட்கள் விலகி இருக்கப்போகிறேன்.. ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்!

சாய் பல்லவி குறித்து ஆர்.பார்த்திபன் சொன்ன விஷயம் :

அந்த பதிவில் நடிகர் ஆர்.பார்த்திபன், “தமிழக அரசின் பத்து விருதை மேடையில், ஏறி இறங்கி, ஏறி இறங்கி வாங்கிக்கொண்டு வந்து அமர்வதை பார்த்த, இந்த தலைமுறையின் மிக சிறந்த நடிகையின் பேஸ்ட் கமெண்ட். அதில் நடிகை சாய் பல்லவி, “ஏன் அந்த ஸ்டேஜ்லயே சேர் போட்டு உக்காந்து, எல்லா ஷீல்டையும் வாங்கிட்டு வரவேண்டியதுதானே? என பார்த்திபனை கிண்டல் செய்துள்ளார்”. இது குறித்து நடிகர் ஆர்.பார்த்திபனின் உதவியாளர் எடிட் செய்துகொடுத்ததாக, தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

சாய் பல்லவி கிண்டல் செய்தது குறித்து ஆர். பார்த்திபன் வெளியிட்ட பதிவு:

நடிகை சாய் பல்லவி தொடர்ந்து இந்தி மொழியில் படங்களில் நடித்துவரும் நிலையில், தற்போது தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார் தனுஷின் நடிப்பில் டி55 படத்திலும், மணிரத்னத்தின் இயக்கத்தில் புதிதாக உருவாகாவுள்ள படத்திலும் சாய் பல்லவி நடிக்கவுள்ளாராம்.

இதையும் படிங்க: ஒரு நல்ல படத்தை மிஸ் பண்ணிட்டோமேன்னு ஃபீல் பண்ணாதீங்க – விஜய் ஆண்டனி!

இதில் டி55 படத்தில் இவர் நடிப்பது உறுதியாகிய நிலையில், இன்னும் மணிரத்னம் படத்தில் நடிப்பது உறுதியாகவில்லை. அந்த விதத்தில் இந்தியில் மட்டும் இந்த 2026ம் ஆண்டில், ஏக் தின் மற்றும் ராமாயணம் என சாய் பல்லவியின் நடிப்பில் பிரம்மாண்ட படங்கள் வெளியாக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.