Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Sai Pallavi : ‘ராமாயணம் பார்ட் 1’.. சீதையாக நடித்தது குறித்து சாய் பல்லவி நெகிழ்ச்சி!

Sai Pallavi Viral X Post : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த வருபவர் சாய் பல்லவி. இவர் இந்தி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகியிருக்கும் படம்தான் ராமாயணம். இந்த படத்தின் முதல் பாகம் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், அது குறித்து மற்றும் அறிவிப்பு வீடியோ பற்றியும் நடிகை சாய் பல்லவி நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார்.

Sai Pallavi : ‘ராமாயணம் பார்ட் 1’.. சீதையாக நடித்தது குறித்து சாய் பல்லவி நெகிழ்ச்சி!
சாய் பல்லவின் ராமாயணம் திரைப்படம்Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 04 Jul 2025 21:07 PM

மலையாளத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான பிரேமம் (Premam) என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி (Sai Pallavi) . இவர் இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் முன்னணி கதாநாயகியாக நடித்துவந்தார். மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்த இவர், தனுஷின் (Dhanush)  மாரி 2 (Maari 2)  படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். இந்த படமும் அவருக்கு பெரும் வரவேற்பைக் கொடுக்க அடுத்தடுத்து படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழி படங்களில் கதாநாயகியாகக் கலக்கிவந்த இவர், தற்போது பாலிவுட் சினிமாவிலும் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இயக்குநர் நிதேஷ் திவாரியின் (Nitesh Tiwari) இயக்கத்தில் புராண காவிய கதைக்களம் கொண்ட ராமாயணம் (Ramayana) படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி, சீதா தேவியாக (Sita) நடித்துள்ளார்.

இப்படத்தில் முன்னணி நடிகர்களாக ரன்பீர் கபூர் (Ranbir Kapoor) மற்றும் யாஷ் (Yash) நடித்துள்ளனர். இப்படமானது 2 பாகங்களாக வெளியாகவுள்ள நிலையில், முதல் பாகத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்தது. இந்நிலையில், இப்படத்தின் அறிவிப்பு வீடியோவும் சமீபத்தில் வெளியானது. இதை தொடர்ந்து நடிகை சாய் பல்லவி ராமாயணம் படத்தில் சீதையாக நடித்தது குறித்து நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார்.

ராமாயணம் படம் குறித்து நடிகை சாய் பல்லவி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு :

இந்த பதிவில் நடிகை சாய் பல்லவி, “சீதா தேவியின் ஆசீர்வாதத்துடன், அவரின் காவியத்தை மீண்டும் உருவாக்குவதற்கு, தெய்வீகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னோடிகளுடன் இணைந்து, அவரது பயணத்தைப் படக்குழு மற்றும் நடிகர்களுடனும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் நாம் அடைய முயற்சிக்கும் அற்புத அனுபவத்தை, நீங்கள் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்று நான் பிராத்திக்கிறேன்” என நடிகை சாய் பல்லவி தனது அனுபவம் குறித்து நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார்.

ராமாயணம் பார்ட் 1 படம் :

இயக்குநர் நிதேஷ் திவாரியின்  இயக்கத்தில் உருவாக்கியவரும் படம்தான் ராமாயணம். இது இந்து கடவுளான ராமனை அடிப்படியாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படமானது 2 பாகங்களாக உருவாக்கவுள்ள நிலையில், முதல் பக்கத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணியிலிருந்து வருகிறது. இந்த படத்தில் ராமனாக ரன்பீர் கபூரும், ராவணனாக யாஷ் மற்றும் சீதையாக நடிகை சாய் பல்லவியும் நடித்திருக்கின்றனர்.

இந்த ராமாயணம் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துவருகிறார். இந்து புராணக் கதையான இப்படத்தின் மீது ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இப்படத்தின் முதல் பாகம் வரும் 2026ம் ஆண்டிலும், இரண்டாம் பாகம் வரும் 2027ம் ஆண்டு தீபாவளியின்போது வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.