Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Dude : பிரதீப் ரங்கநாதத்தின் ‘டியூட்’ – ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் – எத்தனை கோடிக்குத் தெரியுமா?

Pradeep Ranganathan Dude Movie Update :தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர்தான் பிரதீப் ரங்கநாதன். இவரின் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் உருவாகிவரும் நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் படம் டியூட். இப்படத்தைப் பிரபல ஓடிடி நிறுவனம் பல கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Dude : பிரதீப் ரங்கநாதத்தின் ‘டியூட்’  – ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் – எத்தனை கோடிக்குத் தெரியுமா?
பிரதீப் ரங்கநாதத்தின் டியூட் படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 04 Jul 2025 15:36 PM

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் ( Pradeep Ranganathan) முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் டிராகன் (Dragon). இந்த படத்தை அவரின் நண்பரும், இயக்குநருமான அஸ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu) இயக்கியிருந்தார். கடந்த 2025, பிப்ரவரி மாதத்தில் வெளியான இப்படமானது பெரும் வரவேற்பைப் பெற்று ஹிட்டாகியிருந்தது. இப்படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து அவரின் நடிப்பில் 4வதாக உருவாகிவரும் படம்தான் டியூட்(Dude). இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் (Keerthiswaran) இயக்கிவருகிறார். இவர் இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டியூட் படமானது தமிழ், தெலுங்கு மாற்றம் மலையாளம் என பல்வேறு மொழிகளில் உருவாகிவருகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) நிறுவனம் தயாரித்துவரும் இப்படமானது மாறுபட்ட திரைக்கதைகளுடன் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhayankkar) இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்திலிருந்துவரும் நிலையில், இப்படத்தைப் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையைப் பிரபல நிறுவனமான நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளதாம். சுமார் ரூ. 25 கோடிகள் கொடுத்து இப்படத்தின் நெட்பிளிக்ஸ் உரிமையைப் பெற்றதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

பிரதீப் ரங்கநாதனின் டியூட் படக்குழு வெளியிட்ட போஸ்டர் பதிவு :

டியூட் படத்தின் ரிலீஸ் எப்போது?

அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில், பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்து வருகிறார். மேலும் அவர்களுடன் நடிகர்கள் ஹிருது ஹூரன், சரத்குமார், மற்றும் ரோகிணி எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்தின் அறிவிப்புகள் கடந்த 2025, பிப்ரவரி மாதத்தில் வெளியான நிலையில், அதை தொடர்ந்து ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் படு வைரலானது. மேலும் இப்படம் 2025ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் இப்படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் :

டிராகன் திரைப்படத்தை அடுத்து நடிகர் பிரதீப் ரங்கநாதன், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தில் இணைந்தார். இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். மேலும் நயன்தாராவின் ரவுடி பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. இப்படத்தின் அறிவிப்பு கடந்த 2024ம் ஆண்டில் வெளியாகியிருந்தது. இப்படமானது முழுவதும் சைன்ஸ் பிக்சன் படமாக உருவாகியிருக்கிறது.

இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன், நடிகர்கள் கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான் மற்றும் யோகி பாபு என பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். அனிருத்தின் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படமானது வரும் 2025, செப்டம்பர் 18ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.