Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Karuppu: சூர்யாவின் ‘கருப்பு’ டீசர்.. சாய் அபயங்கர் கொடுத்த மாஸ் அப்டேட்!

Karuppu Movie Teaser Update : தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராக வளர்ந்து வருபவர் சாய் அபயங்கர்.. இவரின் இசையமைப்பில் உருவாகிவரும் படம்தான் கருப்பு. சூர்யாவின் 45வது திரைப்படமான இப்படத்தின் டீசர் ரிலீஸ் குறித்து, சாய் அபயங்கர் அப்டேட் கொடுத்துள்ளார். இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Karuppu: சூர்யாவின் ‘கருப்பு’ டீசர்.. சாய் அபயங்கர் கொடுத்த மாஸ் அப்டேட்!
சூர்யாவின் கருப்பு திரைப்படம் Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 04 Jul 2025 11:59 AM

நடிகர் சூர்யாவின் (Suriya)  45வது திரைப்படமாக உருவாகியிருப்பது கருப்பு (Karuppu) திரைப்படம். இந்த படத்தை கோலிவுட் பிரபல நடிகர் மற்றும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி RJ Balaji)  இயக்கியுள்ளார். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. சூர்யாவின் 45வது திரைப்படமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த நவம்பர் மாதத்தில் பூஜைகளுடன் ஷூட்டிங் தொடங்கியிருந்தது. மேலும் நடிகர் சூர்யா இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்துள்ளார். இவர் சூர்யாவுடன் இறுதியாக ஆறு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து சுமார் 20 வருடங்களுக்குப் பின் சூர்யாவுடன் இந்த கருப்பு திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார். இந்த கருப்பு திரைப்படத்தின் ட்ரீம்ஸ் வாரியர் பிக்சர்ஸ் (Dreams Warrior Pictures) நிறுவனமானது தயாரித்து வருகிறது.

மேலும் இப்படத்திற்காக இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துள்ளார். தமிழில் இவர் இரண்டாவதாக இசையமைப்பாளராக ஒப்பந்தமான பெரிய பட்ஜெட் படமாகும். இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சாய் அபயங்கர், சூர்யாவின் கருப்பு பட டீசர் (Karuppu  Teaser) ரிலீஸ் குறித்தும், படத்தைப் பற்றியும் அப்டேட் கொடுத்துள்ளார். தற்போது இந்த தகவலானது இணையத்தில்ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

கருப்பு திரைப்பட டீசர் குறித்து அப்டேட் கொடுத்த சாய் அபயங்கர் :

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சாய் அபயங்கரிடம் சூர்யாவின் கருப்பு திரைப்படம் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த சாய் அபயங்கர், “சூர்யா சாரின் கருப்பு படத்தின் டீசர் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது. மேலும் நான் சூர்யா சாரின் ரசிகனாகக் கூறவேண்டும் என்றால், அவற்றின் நீங்கள் திரைப்படத்தில் எப்படியெல்லாம் பார்க்கவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதைப்போல் இப்படத்தில் நடித்துள்ளார்.

மேலும் அவரின் சிங்கம் திரைப்படத்திற்குப் பிறகு , கூரையைப் பிய்த்துக்கொண்டு போகும் திரைப்படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். மேலும் இந்த கருப்பு படமானது சூர்யாவின் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும்” என்று அவர் பேசியுள்ளார். தற்போது இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சூர்யாவின் பிறந்தநாளை 2025, ஜூலை 23ம் தேதி என்ற நிலையில், அன்று கருப்பு திரைப்படத்தின் டீசர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருப்பு பட டைட்டில் அறிவிப்பு பதிவு :

கருப்பு படத்தின் ரிலீஸ் எப்போது ?

நடிகர் சூர்யா மற்றும் திரிஷா கிருஷ்ணன் இணைந்து நடித்திருக்கும் இப்படமானது, முற்றிலும் கிராமத்து அதிரடி ஆக்ஷ்ன் திரைப்படமாக உருவாகியுள்ளதாம். இந்த படத்தில் சூர்யா மற்றும் திரிஷா வழக்கறிஞர்களாக நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் நடிகர்கள் யோகி பாபு, ஷிவதா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ் மற்றும் நட்டி நடராஜன் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

அதிரடி திரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த இறுதிக்கட்ட பணியிலிருந்து வருகிறது. இந்நிலையில், இப்படமானது வரும் 2025ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்தான அறிவிப்பு சூர்யாவின் பிறந்தநாளில் வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.