Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

‘3BHK’ படத்திற்கு பாசிட்டிவ் ரிவியூ.. மனதார பாரட்டிய லப்பர் பந்து இயக்குநர்..!

Tamizharasan Pachamuthu Praises 3BHK Movie : தமிழ் சினிமாவில், தான் இயக்கிய முதல் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து. இவரின் இயக்கத்தில் லப்பர் பந்து திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்நிலையில், நடிகர்கள் சித்தார்த் மற்றும் சரத்குமார் நடிப்பில் வெளியாகவுள்ள 3BHK படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதத்தில் எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.

‘3BHK’ படத்திற்கு பாசிட்டிவ் ரிவியூ.. மனதார பாரட்டிய லப்பர் பந்து இயக்குநர்..!
தமிழரசன் பச்சமுத்து Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 05 Jul 2025 14:35 PM

இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து (Tamizharasan Pachamuthu) இயக்கத்தில் வெளியான திரைப்படம் லப்பர் பந்து (Lubber Panthu) . கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் வெளியான இப்படமானது எதிர்பார்த்த வரவேற்பையும் கடந்து, ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலும் நல்ல ஹிட் படமாக அமைந்திருந்தது. இந்த படத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஸ்வாசிகா என பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். கடந்த 2024ம் ஆண்டு குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது என்றே கூறலாம். இந்த படத்தைத் தொடர்ந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து அடுத்ததாக தனுஷின் (Dhanush)  நடிப்பில் புதிய படத்தில் இணையவுள்ளார் என்றும் கூறப்படுகிறது .

இந்நிலையில், இவர் தற்போது 3BHK படக்குழுவை வாழ்த்தியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். தற்போது இவர் வெளியிட்ட எக்ஸ் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில் இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து படக்குழுவினர் குறிப்பாக இயக்குநர் ஸ்ரீகணேஷை (Sri Ganesh)  வாழ்த்தியுள்ளார்.

இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து 3BHK படக்குழுவை வாழ்த்தி வெளியிட்ட பதிவு :

அந்த பதிவில் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, “நானும் முன்பு இதைப்போல எனது தந்தையின் கனவைத் தூக்கி சுமந்திருந்திருந்த காரணத்தினாலோ, என்னவோ இந்த படத்தைப் பார்த்தபிறகு எனது வீடு போலவே இருக்கிறது. நிச்சயம் இந்த படம் பார்க்கும் அனைவருக்கும் ஒத்துப்போகும், நிச்சயம் அனைவரும் பாருங்கள்” என இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து கூறியிருக்கிறார், மேலும் நெருக்கமான வாழ்த்துக்கள் என இயக்குநர் ஸ்ரீ கணேஷிற்கு சிறப்பான வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

3BHK திரைப்படம் :

இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 3BHK. இப்படத்தில் முன்னணி வேடங்களில் நடிகர்கள் சரத்குமார் மற்றும் சித்தார்த் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் நடிகைகள் தேவயானி மற்றும் மீத்தா ரகுநாத் நடித்துள்ளனர். பல வருடங்களுக்குப் பின் சரத்குமார் மற்றும் தேவயானியும் இப்படத்தில் இணைந்த நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மிடில் கிளாஸ் குடும்ப கதைக்களத்துடன் வித்தியாசமாக உருவாகியிருக்கிறது. ஒரு குடும்பம் ஒரு வீட்டை வாங்குவதற்கு எவ்வாறு கஷ்டப்படுகிறது.

அதற்காக ஹீரோ சித்தார்த் எவ்வளவு கஷ்டத்தை மேற்கொள்கிறார் என்பதுதான் இப்படத்தின் கருவாக இருக்கிறது. இப்படமானது வரும் 2025, ஜூலை 4ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகின்ற நிலையில், எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.