Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vijay Sethupathi: மகன் வீடியோவை நீக்க சொல்லி மிரட்டல்?- மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி!

Vijay Sethupathi Apology : தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவர்தான் விஜய் சேதுபதி. இவரின் மகன் சூர்யா சேதுபதியும் பீனிக்ஸ் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில், மகன் குறித்த அவதூறான வீடியோக்களை நீக்கச் சொல்லி விஜய் சேதுபதி மற்றும் சூர்யா சேதுபதி தரப்பில் மிரட்டல்கள் எழுத்தாகக் கூறப்பட்ட நிலையில், விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்டுள்ளார்.

Vijay Sethupathi: மகன் வீடியோவை நீக்க சொல்லி மிரட்டல்?- மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி!
விஜய் சேதுபதி மற்றும் சூர்யா சேதுபதி Image Source: Social Media
barath-murugan
Barath Murugan | Published: 03 Jul 2025 14:51 PM

கோலிவுட் சினிமாவில் நடிப்பிற்கு தோற்றமும் , நிறமும் தேவையில்லை என அனைவருக்கும் புரியவைத்தவராக இருந்து வருபவர் விஜய் சேதுபதி (Vijay sethupathi ) . தமிழில் தொடர்ந்து கதாநாயகனாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக ஏஸ் (Ace) திரைப்படம் வெளியானது. இந்த படமானது கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. மேலும் இப்படம் ரிலீசானது கூட பல ரசிகர்களுக்குத் தெரியாது என்றே கூறலாம். அந்த அளவிற்கு இப்படத்திற்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் அவ்வளவாக இல்லை. இந்த படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, தெலுங்கிலும் கதாநாயகனாக புதிய திரைப்படத்தில் அறிமுகமாகவுள்ளார். இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதியும் (Surya Sethupathi ) சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

இவர் இயக்குநர் அனல் அரசு (Anal Arasu)  இயக்கத்தில் பீனிக்ஸ் (Phoenix)  என்ற படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றின் போது சூர்யா  சேதுபதி, சுவிங்கம்  மென்றபடியே இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பல விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.

மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி :

இந்நிலையில், இந்த வீடியோவை இணையதளங்களிலிருந்து நீக்கும்படியாக விஜய் சேதுபதி மற்றும் சூர்யா சேதுபதி தரப்பில் மிரட்டல்கள் எழுந்துவருவதாகத் தகவல்கள் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, “எங்கள் தரப்பிலிருந்து யாருக்காவது போன் அழைப்பு வந்து, மிரட்டல்கள் நடந்திருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என அதில் பேசியுள்ளார்.

விஜய் சேதுபதி வெளியிட்ட பீனிக்ஸ் பட ட்ரெய்லர் பதிவு :

சூர்யா சேதுபதியின் விமர்சனங்கள் :

விஜய் சேதுபதியின் மகன்தான் சூர்யா சேதுபதி. இவரின் தனது சிறுவயதிலே தனது தந்தையின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். அதை தொடர்ந்து சினிமாவில் ஹீரோவாக நடக்கவேண்டும் என்று ஆசை கொண்ட அவர், தற்போது பீனிக்ஸ் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமாகியிருக்கிறார். அவர் கதாநாயகனாக நடிக்க வருவதற்கு முன்னே, ஒரு நேர்காணலில் “எனது அப்பா வேற.. நான் வேற” எனக் கூறி பல விமர்சனங்களைப் பெற்றிருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் இருவரிலும் இணையதளங்களிலிருந்து வருகிறது.

இந்நிலையில், இந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, அவர் நடித்திருக்கும் பீனிக்ஸ் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது சூர்யா சேதுபதி தனது வாயில் சுவிங்க்ம சாப்பிடப்படி  போஸ் கொடுத்திருந்தார். இந்த வீடியோ தான் மீண்டும் விமர்சனங்களை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.