Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பூஜையுடன் தொடங்கியது செல்வராகவனின் புதுப் படம்… வைரலாகும் போட்டோஸ்!

Actor Selvaraghavan Next Movie: தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் செல்வராகவன். தற்போது படங்களை இயக்குவதை குறைத்துக்கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடிகராக நடித்து வருகிறார். இயக்குநராக இயக்கிய படங்களை விட நடிகராக இவர் நடித்தப் படங்களின் எண்ணிக்கை அதிகம்.

பூஜையுடன் தொடங்கியது செல்வராகவனின் புதுப் படம்… வைரலாகும் போட்டோஸ்!
குஷி ரவி, செல்வராகவன், கௌசல்யாImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 03 Jul 2025 11:26 AM

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் செல்வராகவன் (Director Selvaraghavan). இவர் தற்போது படங்களை இயக்குவதில் இருந்து விலகி தொடர்ந்து நடிப்பு துறையில் பிசியாக வலம் வருகிறார். இந்த நிலையில் நடிகர் செல்வராகவனின் புதுப் படத்தின் பணிகள்நேற்று ஜூலை மாதம் 2-ம் தேதி 2025-ம் ஆண்டு பூஜையுடன் தொடங்கியது. தற்போது அந்த பூஜையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி நடிகர் செல்வராகவனின் நடிப்பில் உருவாக உள்ள இந்தப் படத்தை இயக்குநர் டென்னின்ஸ் மஞ்சுநாத் (Director Dennis Manjunath) எழுதி இயக்குகிறார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் செல்வராகவன் உடன் இணைந்து நடிகர்கள் குஷி ரவி மற்றும் கௌசல்யா இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் செல்வராகவன் இறுதியாக சந்தானம் நடிப்பில் வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் ஒரு வேடத்தில் நடித்து இருந்தார். அந்தப் படத்தில் செல்வராகவனின் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் புதியப் படத்தில் நடிகர் செல்வராகவன் முன்னணி நடிகராக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

செல்வராகவனின் புதுப் படத்தின் பூஜைப் படங்கள்:

சூப்பர் ஹிட் இயக்குநர் டூ நடிகர்:

தமிழ் சினிமாவில் இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன்களாக இயக்குநராக செல்வராகவனும் நடிகராக தனுஷும் அறுமுகம் ஆன படம் துள்ளுவதோ இளமை. இந்தப் படம் ரசிகரக்ளிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம், மயக்கம் என்ன என பலப் படங்களை இயக்கி உள்ளார்.

இதனை தொடர்ந்து தற்போது படங்களை இயக்குவதை விட்டுவிட்டு தற்போது தொடர்ந்து படங்களில் நடிகராக நடிக்கத் தொடங்கிவிட்டார் செல்வராகவன். அதே நேரத்தில் தனது இயக்கத்தில் முன்னதாக வெளியான 7 ஜி ரெயின்போ காலணி படத்தின் இரண்டாம் பாகத்தை மட்டும் அவர் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.