நான் பார்த்த சிறந்த நடிகர்களில் ஒருவர் தனுஷ்… புகழ்ந்து தள்ளிய கிருத்தி சனோன்
Kriti Sanon Praises Dhanush: கோலிவுட் சினிமாவில் வரிசையாக படங்களில் நடித்து வரும் தனுஷ் அவ்வப்போது பாலிவுட் பக்கமும் எட்டிப்பார்ப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் பாலிவுட் சினிமாவில் உருவாகியுள்ள படம் தேரே இஷ்க் மே. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடித்த நடிகை கிருத்தி சனோன் அவரைப் பாராட்டியது வைரலாகி வருகின்றது.

நடிகர் தனுஷ் (Actor Dhanush) கோலிவுட் சினிமாவில் மட்டும் இன்றி பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என தனது நடிப்பின் மூலம் கலக்கி வருகிறார் நடிகர் தனுஷ். இவர் தற்போது இந்தியில் தேரே இஸ்க் மெய்ன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் ஆனந்த் எல் ராய் (Anand L Rai) இயக்கியுள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகை கிருத்தி சனோன் நாயகியாக நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஏப்ரல் மாதத்தில் தொடங்கியதாக படக்குழு அறிவித்த நிலையில் தற்போது ஜூலை மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நடிகை கிருத்தி சனோன் நடிகர் தனுஷின் நடிப்பை பாராட்டி பதிவிட்டுள்ளார்.
நடிகர் தனுஷை புகழ்ந்து பேசிய நடிகை கிருத்தி சனோன்:
நடிகை கிருத்தி சனோன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் கூறியதாவது, தேரே இஸ்க் மெய்ன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மேலும் ஆனந்த் எல் ராயின் காதல் நாடகம் மிகவும் அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி மாதிரி மிகவும் விறுவிறுப்பாக பணிகள் நடைப்பெற்றது என்று தெரிவித்துள்ளார்.




மேலும், இந்தப் படத்தில் என்னை தேர்ந்தெடுத்ததற்காக மிகவும் நன்றி ஆனந்த் எல் ராய் சார் என நடிகை கிருத்தி சனோன் தெரிவித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் பற்றி பேசிய நடிகை கிருத்தி சனோன் நான் பணியாற்றிய சிறந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ் என்று பாராட்டியுள்ளார். மேலும் அவருடன் பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி என்றும் தெரிவித்து இருந்தார்.
நடிகை கிருத்தி சனோன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய் உடன் ராஞ்சனா மற்றும் அத்ரங்கி ரே படங்களுக்குப் பிறகு நடிகர் தனுஷ் மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்றும் படம் இந்த தேரே இஸ்க் மெய்ன் ஆகும். மேலும் நடிகை கிருத்தி சனோன் உடன் நடிகர் தனுஷ் கூட்டணி அமைப்பது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் இந்த 2025-ம் ஆண்டு வெளியாகும் என்று இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.