Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கேம் சேஞ்சர் படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் ராம் சரண் – தில் ராஜூ கூட்டணி?

Actor Ram Charan: டோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ராம் சரண். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் பல தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் ராம் சரண் மீண்டும் தயாரிப்பளர் தில் ராஜு தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

கேம் சேஞ்சர் படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் ராம் சரண் – தில் ராஜூ கூட்டணி?
ராம் சரண் - தில் ராஜூImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Jul 2025 14:49 PM

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் சிரஞ்சீவியின் மகன் தான் நடிகர் ராம் சரண் (Actor Ram Charan). இவர் கடந்த 2007-ம் ஆண்டு சிருதா என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து பலப் படங்களில் நடித்து தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களின் பட்டியளில் இடம் பிடித்துள்ளார் நடிகர் ராம் சரண். இந்த நிலையில் நடிகர் ராம் சரண் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கேம் சேஞ்சர். இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் ராம் சரண் அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார். இவர் உடன் இணைந்து நடிகர்கள் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில், ஜெயராம் மற்றும் சமுத்திரக்கனி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பொலிட்டிகல் ஆக்‌ஷன் ட்ராமாவாக வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. படம் நெகட்டிவான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் படத்தில் பணிபுரிந்தவர்களும் தொடர்ந்து இயக்குநர் ஷங்கரின் வேலைகள் குறித்து வெளிப்படையாக விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

கேம் சேஞ்சர் படம் குறித்து தயாரிப்பாளர் சொன்ன சர்ச்சைக் கருத்து:

ராம் சரணின் நடிப்பில் வெளியான இந்த கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாள தில் ராஜூ சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் இயக்குநர் சங்கர் மாதிரியான ஒருவருடன் பணியாற்றியது என் சினிமா வாழ்க்கையில் நான் எடுத்த தவறான முடிவு என்று வெளிப்படையாக பேசியிருந்தார். தொடர்ந்து படத்தின் எடிட்டர் சங்கர் மீது வைத்த விமர்சனம் சரி என்றும் அவர் தெரிவித்தார்.

நடிகர் ராம் சரண் குறித்து பேசிய தயாரிப்பாளர் தில் ராஜூ ஆர்ஆர்ஆர் மாதிரி மாபெரும் ஹிட் கொடுத்த நடிகர் ராம் சரணை இந்தப் படத்தில் நடிக்க வைத்ததும் படம் அவருக்கு தோல்வியை தேடித்தந்ததும் மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். படத்தின் தயாரிப்பாளரே இப்படி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மீண்டும் இணையும் ராம் சரண் – தில் ராஜூ கூட்டணி:

கேம் சேஞ்சர் படம் படு தோல்வியை சந்தித்த நிலையில் நடிகர் ராம் சரணுக்கு தனது தயாரிப்பில் ஒரு ஹிட் படம் கொடுத்துவிட வேண்டும் என்று தயாரிப்பாளர் தில் ராஜூ முடிவு செய்துள்ளார். அதன் காரணமாக ராம் சரணை வைத்து ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுப்பதற்கான பணிகள் நடைப்பெற்று வருவதாகவும் விரைவில் அந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இயக்குநர் சங்கர் குறித்து தில் ராஜூ பேசிய வீடியோ: