AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தாய் கிழவி முதல் ஆழி வரை… நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்களில் லிஸ்ட் இதோ!

Tomorrow Theatre Release Movies List Here: தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து பலப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் நாளை தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படங்களின் பட்டியலை இந்த செய்தி தொகுப்பில் தற்போது பார்க்கலாம்.

தாய் கிழவி முதல் ஆழி வரை… நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்களில் லிஸ்ட் இதோ!
படங்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Feb 2026 19:18 PM IST

தாய் கிழவி: தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் நடிகை ராதிகா சரத்குமார். பலப் படங்களில் நாயகியாக நடித்து வந்த நடிகை ராதிகா சரத்குமார் தற்போது சினிமாவில் முக்கிய கதாப்பாத்திரங்களிலும், அம்மா வேடங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி நடிகை ராதிகா சரத்குமார் முன்னணி வேடத்தில் நடித்துள்ள படம் தாய் கிழவி. இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தில் தக் லைஃப் பாட்டியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கி உள்ள நிலையில் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் அவரது தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரடெக்‌ஷன் தயாரித்துள்ளது. படம் நாளை 27-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபோர்த் ஃப்ளோர்: நடிகர் ஆரி அர்ஜூனன் நாயகனாக நடித்துள்ள படம் ஃபோர்த் ஃப்ளோர். இந்தப் படத்தை இயக்குநர் எல்.ஆர். சுந்தரபாண்டி எழுதி இயக்கி உள்ளார். மேலும் சைகாலஜி த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர் ஆரி அர்ஜுனன் உடன் இணைந்து நடிகர்கள் பவித்ரா, தீப்ஷிகா, பேபி ஸ்ரீவர்ஷினி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை 27-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… மலையாள இயக்குநருடன் புது படத்தில் இணையும் சியான் விக்ரம் – ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் தகவல்!

ஆழி: இயக்குநர் மாதவ் ராமதாசன் எழுதி இயக்கி உள்ள படம் ஆழி. இந்தப் படத்தில் சுப்ரீம் ஸ்டார் நடிகர் சரத்குமார் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் மீனவராக நடிகர் சரத்குமார் நடித்து உள்ளது படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும் போது தெரிகிறது. மேலும் இந்தப் படத்தில் தனது மகளுக்காக பழிவாங்கும் அப்பாவாக நடிகர் சரத்குமார் நடித்து உள்ளது படத்தின் டீசரைப் பார்க்கும் போது தெரிகிறது. படம் நாளை 27-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… தொலைதூரத்தில் வெளிச்சம் நீ… 16 ஆண்டுகளை நிறைவு செய்தது விண்ணைத்தாண்டி வருவாயா படம்

Follow Us