AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Samantha Ruth Prabhu: சினிமாவில் 16 ஆண்டுகளை கடந்த சமந்தா ரூத் பிரபு – ரசிகர்கள் மத்தில் குவியும் வாழ்த்து!

16 Years Of Samantha: தென்னிந்திய சினிமாவில் உச்ச கதாநாயகியாக கலக்கிவருபவர் சமந்தா ரூத் பிரபு. இவரின் நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டில் வெளியான யே மாயா சேசாவே படம் இன்றுடன் 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதன் மூலமாகதான் சமந்தா கதாநாயகியாக நுழைந்த நிலையில், அவரும் சினிமாவில் 16 வருடங்களை கடந்துள்ளார்.

Samantha Ruth Prabhu: சினிமாவில் 16 ஆண்டுகளை கடந்த சமந்தா ரூத் பிரபு – ரசிகர்கள் மத்தில் குவியும் வாழ்த்து!
சமந்தா ரூத் பிரபுImage Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Updated On: 26 Feb 2026 17:09 PM IST

நடிகை சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu) தென்னிந்திய மொழிகளில் கதாநாயகியாக நடித்து அசத்திவருகிறார். இவர் சில ஆண்டுகளாக படங்களில் கதாநாயகியாக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து இவரே லீட் கதாநாயகியாக நடித்துள்ள படம் மா இன்டி பங்காரம் (Maa Inti Bangaram). இந்த படத்தில் சமந்தா ஆக்ஷன் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், இயக்குநர் நந்தினி ரெட்டி (Nandini Reddy) என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், வரும் 2026ம் ஆண்டு மே 16ம் தேதியில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகை சமந்தா தெலுங்கில் “யே மாயா சேசாவே” (Ye maaya chesave) என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக நுழைந்தார். இப்படத்தில் நடிகர் நாக சைத்தன்யாவிற்கு ஜோடியாக நடித்து இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இப்படம் தமிழில் வெளியான கௌதம் மேனனின் (Gautham Menon), “விண்ணைத்தாண்டி வருவாயா” என்ற படத்தின் தெலுகு ரீமேக் ஆகும்.

இப்படமானது கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதியோடு வெளியிடப்பட்டிருந்த நிலையில், இன்று 2026ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதியோடு இந்த திரைப்படம் வெளியாகி 16 ஆண்டுகளை கடந்துள்ளது. இப்படத்தின் மூலமாக தான் சமந்தா கதாநாயகியாக அறிமுகமான நிலையில், அவரும் சினிமாவில் நுழைந்து கிட்டத்தட்ட 16 ஆண்டுகளை கடந்துள்ளார்.

இதையும் படிங்க: யாசின் டாக்ஸிக் படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனங்கள்

நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

சினிமாவில் 16 ஆண்டுகளை கடந்த சமந்தா ரூத் பிரபு :

நடிகை சமந்தா ரூத் பிரபு, தெலுங்கு சினிமாவின் மூலம் கதாநாயகியாக நுழைந்தாலும், தமிழ் மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். அந்த வகையில் தெலுங்கு மொழியை ஒப்பிடும்போது இவருக்கு தமிழில் மக்களிடையே நல்ல வரவேற்பு உண்டு. மேலும் இவர் தமிழில் தளபதி விஜய் முதல் சூர்யா போன்ற நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துள்ளார். அதிலும் இவருக்கு தமிழில் விஜயுடன் நடித்துள்ள படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட்டாகியிருந்தது. மேலும் இவர் தற்போது பெரிய நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடிப்பத்தை தவிர்த்து, தானே படங்களில் லீட் கதாநாயகியாக நடித்துவரத் தொடங்கியுள்ளார்.

இதையும் படிங்க: தமிழில் எந்த நடிகையும் என்னுடன் நடிக்க ரெடியாக இல்ல – வெளிப்படையாக பேசிய கென் கருணாஸ்!

அந்த வகையில் இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம்தான் ம இன்டி பங்காரம். வெறும் நடிகையாக மட்டுமில்லாமல் நடிகை சமந்தா, பிஸ்னஸ், தயாரிப்பு நிறுவனம் போன்ற பல்வேறு வேலைகளையும் செய்துவருகிறார். இந்நிலையில் தற்போது நடிகை சமந்தா கதாநாயகியாகவே சினிமாவில் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளை கடந்துள்ளார். இதன் காரணமாக ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us