AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தலைவர் 173 படத்தில் இணையும் பிரபல நடிகர்கள்? இணையத்தில் கவனம் பெறும் தகவல்

Thalaivar 173 Movie Actors Details Viral On Social Media: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் தலைவர் 173. இந்தப் படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தலைவர் 173 படத்தில் இணையும் பிரபல நடிகர்கள்? இணையத்தில் கவனம் பெறும் தகவல்
தலைவர் 173Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Feb 2026 13:16 PM IST

சினிமா ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தமிழ் ரசிகர்களிடையே மட்டும் இன்றி உலக அளவில் உள்ள சினிமா ரசிகர்களால் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது அவரது 172-வது படமான ஜெயிலர் 2 படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த பிறகு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக 173-வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. முன்னதாக இந்தப் படத்தினை இயக்குநர் சுந்தர் சி இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவிப்பு வெளியான அடுத்த சில நாட்களிலேயே சுந்தர் சி படத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.

இந்த செய்தி ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் அதனைத் தொடர்ந்து சில நாட்களிலேயே தலைவர் 173 படத்தை இயக்குவது யார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி தலைவர் 173 படத்தினை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தலைவர் 173 படத்தில் இணையும் பிரபல நடிகர்கள்?

அதன்படி இயக்குநர் சிபி சக்ரவர்த்தி நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு பணிகள் வருகின்ற ஏப்ரல் மாதம் மத்தியில் தொடங்கும் என்று இயக்குநர் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் பேசில் ஜோசஃப் மற்றும் மாளவிகா மோகனன் இருவரும் இணைந்து முக்கியமான வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தப் படம் உணர்ச்சிப்பூர்வமாகவும், காமெடி மற்றும் ஆக்‌ஷன் நிறைந்த படமாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Also Read… வெங்கட் பிரபுவின் படம் என்ன ஆச்சு? சேயோன் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் இணையும் இயக்குநர் இவரா?

தலைவர் 173 படம் குறித்து வைரலாகும் தகவல்:

Also Read… இந்த சினிமா துறை அனைத்தையும் கற்றுக்கொடுக்கும்… தமன்னா ஓபன் டாக்