AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தலைவர் 173 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்… இயக்குநர் சொன்ன அப்டேட்!

Thalaivar 173 Movie Shooting Update: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 173 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று இயக்குநர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

தலைவர் 173 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்… இயக்குநர் சொன்ன அப்டேட்!
ரஜினிகாந்த் மற்றும் சிபி சக்ரவர்த்திImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Feb 2026 10:35 AM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ள நிஅலியில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த ஜெயிலர் 2 படத்தின் பணிகளை முடிப்பதற்கு முன்பாகவே நடிகர் ரஜினிகாந்த் தனது அடுத்தடுத்தப் படங்களின் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி அடுத்ததாக ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள 173 மற்றும் 174 படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படங்களின் பணிகள் எப்போது தொடங்கும் என்பது குறித்த அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இந்த நிலையில் தலைவர் 173 படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக நடிகர் கமல் ஹாசன் தயாரிக்க உள்ளார். இந்தப் படத்தின் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி சமீபத்தில் தாய் கிழவி படத்தின் விழாவில் கலந்துகொண்டு பேசினார். அதில் தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த அப்டேட்களை தெரிவித்து உள்ளார்.

தலைவர் 173 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்:

தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திட்டம் ஏப்ரல் மாத மத்தியில் தொடங்கும் என்று இயக்குநர் சிபி சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய சிபி சக்ரவர்த்தி நான் ஒரு கிராமத்திலிருந்து வந்தவன், சிவகார்த்திகேயன் போன்ற ஒரு ஹீரோவை இயக்குவது ஒரு கனவாக இருந்தது. நான் முதலில் அவரிடம் ஒரு கதையைச் சொன்னபோது, ​​அவர் அதை நிராகரித்தார். பின்னர் நான் பல ஹீரோக்களை அணுகி இறுதியில் அவரிடம் திரும்பினேன். இந்த முறை அவர் அதை ஏற்றுக்கொண்டார். அப்போதிருந்து, அவர் எனக்கு ஒரு பெரிய தார்மீக ஆதரவாக இருந்து வருகிறார். எதிர்மறையான கட்டங்களில் கூட, அவர் என்னுடன் நின்றார் என்று சிபி சக்ரவரத்தி தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… கருப்பு படத்தின் கதை தளபதி விஜய்காக எழுதியதா? ஆர்.ஜே.பாலாஜி ஓபன் டாக்

இணையத்தில் வைரலாகும் சிபி சக்ரவர்த்தி பேச்சு:

Also Read… மணிரத்னம் – விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ள படம் முதலில் தனுஷிற்கு கூறிய கதையா? வைரலாகும் தகவல்