AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூர்யா 47 படம் குறித்து இயக்குநர் சொன்ன விசயம் – வைரலாகும் தகவல்

Director Jithu Madhavan Suriya 47 Movie Update: தமிழ் சினிமாவில் தற்போது அதிக அளவில் பேசப்பட்டு வரும் படங்களில் நடிகர் சூர்யாவின் படங்களும் இருக்கிறது. இந்த நிலையில் சூர்யாவின் 47-வது படத்தின் இயக்குநர் ஜீத்து மாதவன் பேசியதி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சூர்யா 47 படம் குறித்து இயக்குநர் சொன்ன விசயம் – வைரலாகும் தகவல்
சூர்யா 47 படக்குழுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Feb 2026 13:02 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக அடுத்தடுத்தப் படங்கள் வரிசையாக காத்திருக்கின்றது. இதில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள கருப்பு படம் அவரது நடிப்பில் உருவாகி உள்ள நிலையில் இந்தப் படம் கடந்த ஆண்டே வெளியாவதாக இருந்தது. ஆனால் படத்தில் முக்கியமான காட்சிகள் படமாக்க வேண்டும் என்ற காரணத்தால் படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிபோய்கொண்டே இருந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துதற்போது ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவின் 46-வது படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

இந்தநிலையில் இந்த சூர்யா 46 படம் கருப்பு படத்தின் வெளியீட்டிற்கு பிறகு இரண்டு மாத இடைவெளியில் வெளியாகும் என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளர் நாக் வம்சி தெரிவித்து இருந்தார். இது தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாவது போல தற்போது சூர்யாவின் 47-வது படம் குறித்து படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சூர்யா 47 படம் குறித்து இயக்குநர் சொன்ன விசயம்:

பிரபல இயக்குநர் ஜித்து மாதவன் பேட்டி ஒன்றில் பேசியதாவது, சூர்யா 47 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இயக்குனர் மலையாளியாக இருந்தாலும் இது முழுக்க முழுக்க தமிழ் படமாக இருக்கும் என்று ஜித்து மாதவன் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் நஸ்லன் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தொடர்ந்து நடிகர் ஃபஹத் ஃபாசிலுடன் ஆவேசம் 2 படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் இயக்குநர் ஜித்து மாதான் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு படங்கள் தொடர்பான அப்டேட்களை இயக்குநர் ஜித்து மாதவன் கூறியது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Also Read… கதற கதற… சூப்பர் ஹிட் அடித்த டிராகன் ஒரு ஆண்டை நிறைவு செய்தது!

இணையத்தில் வைரலாகும் ஜித்து மாதவனின் பேச்சு:

Also Read… KH x RK படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு – படத்தில் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?