AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அமிதாப் பச்சன் – ராஷ்மிகா மந்தனா நடிப்பில் குட்பை படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்? 

Goodbye Movie OTT Update: இந்தி சினிமாவில் பல ஜானர்களில் படங்கள் தொடர்ந்து வெளியாகி வந்தாலும் அதிக அளவில் ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து படங்கள் வெளியாகி வருகின்றது. அதன்படி ஃபேமிலி காமெடி ட்ராமாவாக வெளியான குட்பை படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

அமிதாப் பச்சன் – ராஷ்மிகா மந்தனா நடிப்பில் குட்பை படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்? 
குட்பைImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Feb 2026 20:02 PM IST

இந்தி சினிமாவில் அதிக அளவில் மக்களிடையே ஃபேமிலி காமெடி ட்ராமா படங்களே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து வரவேற்பைப் பெறும் இந்த ஜானரில் வெளியான படங்களை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து பார்க்கலாம். அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 07-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் குட்பை. இந்தப் படத்தில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ராஷ்மிகா மந்தனா, ரித்தி ஷர்மா, நீனா குப்தா, சுனில் குரோவர், ஷிஹான் பக்ஷி, பாவில் குலாட்டி, மயங்க் பாடியா, சாஹில் மேத்தா, சமர்ஜித் சிங் மகாஜன், பாயல் தாபா, ஷிவின் நரங், எல்லி அவ்ராம், ஆஷிஷ் வித்யார்த்தி, சஞ்சய் மிஸ்ரா, அருண் பாலி, நீலு கோலி, ரஜினி பாசுமதி, ஷயாங்க் சுக்லா, ஷர்வரி, தீது வர்மா, சந்திரஹாஸ் பாண்டே, பரண் முர்மு என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இயக்குநர் விகாஸ் பால் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் பிரபல தயாரிப்பு நிறுவனங்களான குட் கோ. பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் சரஸ்வதி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பாக தயாரிப்பாளர்கள் ஷோபா கபூர், ஏக்தா கபூர், விராஜ் சாவந்த் மற்றும் விகாஸ் பால் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் இசையமைப்பாளர் அமித் திரிவேதி படத்திற்கு இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் ஒபொல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அமிதாப் – ராஷ்மிகாவின் குட்பை படத்தின் கதை என்ன?

மும்பையில் வழக்கறிஞராக இருக்கு ராஷ்மிகா மந்தனா தனது பார்ட்னருடன் வாழ்ந்து வருகிறார். இப்படி இருக்கும் சூழலில் தனது முதல் கேசில் வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து பார்ட்டி செய்கிறார். அப்படி பார்ட்டி செய்துக்கொண்டு இருக்கும் போது அவரது அம்மா நீனா குப்தாவிடம் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வருகிறது. ஆனால் அதனை ராஷ்மிகா மந்தனா எடுக்கவில்லை. இப்படி இருக்கும் நிலையில் அடுத்த நாள் காலையில் ராஷ்மிகாவிற்கு அவரது அம்மா உயிரிழந்துவிட்டதாக செய்தி வருகின்றது.

Also Read… நிவின் பாலியின் பிரதிச்சாயா படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட மோகன்லால்

இதனைத் தொடர்ந்து சொந்த ஊருக்கு செல்கிறார் ராஷ்மிகா. அங்கு அவரது தந்தை அமிதாப் பச்சன் கோபமாக இருக்கிறார். அம்மாவை கவனித்துக்கொள்ளவில்லை என்ற கோபத்தை ராஷ்மிகா மற்றும் அவரது சகோதரர்களிடையே கோபமடைகிறார். இப்படி இருக்கும் சூழலில் அம்மாவின் இறுதிச் சடங்கை அவர்கள் எப்படி செய்து முடித்தார்கள் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… D55 Movie: தனுஷின் ‘டி55’ பட ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? – வைரலாகும் தகவல்!