AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மணிரத்னம் – விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ள படம் முதலில் தனுஷிற்கு கூறிய கதையா? வைரலாகும் தகவல்

Director Mani Ratnam has narrated a script to Dhanush: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவருக்கு இயக்குநர் மணிரத்னம் கதை ஒன்றை கூறியதாகவும் அந்த கதை தனுஷிற்கு பிடித்த நிலையில் என்ன நடந்தது என்று தற்போது பார்க்கலாம்.

மணிரத்னம் – விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ள படம் முதலில் தனுஷிற்கு கூறிய கதையா? வைரலாகும் தகவல்
மணிரத்னம் - தனுஷ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Feb 2026 11:20 AM IST

தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியராக வலம் வருகிறார் இயக்குநர் மணிரத்னம். கடந்த 1983-ம் ஆண்டு கன்னட சினிமாவில் வெளியான பல்லவி அனு பல்லவி என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் மணிரத்னம். இவர் கன்னட சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் தொடர்ந்து பலப் படங்களை இயக்கி வருகிறார். இதில் அதிக அளவில் மணிரத்னம் இயக்கியது தமிழ் சினிமாவில்தான். தொடர்ந்து பான் இந்திய சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வரும் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் தக் லைஃப். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் அடுத்ததாக எந்த நடிகர் நடிப்பார் என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் அது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ள படம் முதலில் தனுஷிற்கு கூறிய கதையா?

இயக்குனர் மணிரத்னம் முதலில் தனுஷிடம் ஒரு ஸ்கிரிப்டை சொல்லியிருக்கிறார், தனுஷுக்கும் அது பிடித்திருக்கிறது. ஆனால் சம்பளப் பிரச்சினையால் அந்தத் திட்டம் நிறைவேறவில்லை. அதனைத் தொடர்ந்து மணிரத்னம் சிலம்பரசன் டி.ஆருக்குச் சொன்ன அதே ஸ்கிரிப்ட் இதுவாகத்தான் தெரிகிறது, இப்போது விஜய் சேதுபதியுடன் அது இறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது விஜய் சேதுபதி இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் பாக்கெட் நாவல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தினை முடித்த பிறகு, விஜய் சேதுபதி அடுத்ததாக இயக்குநர் மணிரத்னம் படத்தைத் தொடங்குவார் என்றும் இந்தப் படத்தில் நடிகை சாய் பல்லவி நாயகியாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா தயாரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read… என் குழந்தைகள் என்னுடைய எந்தப் படத்தையும் பார்த்ததில்லை – ஷாலினி அஜித்குமார்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சூர்யா 47 படம் குறித்து இயக்குநர் சொன்ன விசயம் – வைரலாகும் தகவல்