AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிக்மா படத்திற்கு பிறகுதான் நடிப்பு குறித்து யோசிப்பேன் – ஜேசன் சஞ்சய்

Jason Sanjay Recent Interview Viral On Social Media | தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்து தற்போது முதலமைச்சராக ஆகி உள்ள தளபதி விஜயின் மகன் சினிமாவில் என்ட்ரி கொடுத்து உள்ளார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சிக்மா படத்திற்கு பிறகுதான் நடிப்பு குறித்து யோசிப்பேன் – ஜேசன் சஞ்சய்
ஜேசன் சஞ்சய்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Jul 2026 12:17 PM IST

தமிழ் சினிமாவில் தற்போது மூன்றாவது தலைமுறையாக என்ட்ரி கொடுத்துள்ளார் ஜேசன் சஞ்சய். இவரது தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி உள்ளார். அதனைத் தொடர்ந்து தற்போது படங்களில் நடித்தும் வருகிறார். மேலும் அவரது மகனாக சினிமாவில் இரண்டாம் தலைமுறையாக என்ட்ரி கொடுத்தார் நடிகர் விஜய். இவர் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்து உச்ச நடிகராக வலம் வந்த நிலையில் தற்போது முதலமைச்சராக பணியாற்றி வருகிறார். மேலும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதால் இனி படங்களில் நடிக்க போவதில்லை என்று அவர் தெரிவித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது தலைமுறையாக தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து உள்ளார்.

இவர் முன்னதாக தந்தை விஜயின் படத்தில் ஒரு பாடலுக்கு அவருடன் இணைந்து நடனம் ஆடி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் நடிகராக வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் இயக்குநராக தனது சினிமா பயணத்தை தொடங்கி உள்ளார். இவர் தற்போது நடிகர் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகி உள்ள சிக்மா படத்தினை இயக்கி உள்ளார். இந்த நிலையில் சந்தீப் கிஷன் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சிக்மா படத்திற்கு பிறகுதான் நடிப்பு குறித்து யோசிப்பேன்:

அந்தப் பேட்டியில் ஜேசன் சஞ்சய் தனது நடிப்பு வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதில் அவர் பேசியதாவது, சிக்மா படத்திற்குப் பிறகுதான் நடிப்பு குறித்து யோசிப்பேன் என்று நடிகர் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார். மேலும் நான் இயக்குநராக முடிவெடுத்தபோது, ​​எனது வயதைக் கருத்தில் கொண்டு, நான் ஒரு காதல் கதையைத்தான் உருவாக்குவேன் என்று அனைவரும் கருதினார்கள்.

ஆனால், இரு நபர்களை மையமாகக் கொண்ட காதல் கதையை எடுப்பதற்குப் பதிலாக, ஒரு கும்பலை மையமாகக் கொண்ட சாகசமும் திருட்டும் கலந்த ஒரு படத்தை (heist film) உருவாக்குவதிலேயே நான் அதிக ஆர்வம் காட்டினேன் என்று அந்தப் பேட்டியில் ஜேசன் சஞ்சய் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… விமான நிலையத்தில் ரசிகர் கொடுத்த விபூதி… ரஜினிகாந்த் செய்த கியூட் சம்பவம்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சென்னை 28 பாகம் 3 படத்தின் அப்டேட் என்ன? வைரலாகும் புது தகவல்

Follow Us