AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கடினமாக உழைக்கக்கூடியவர் ஜேசன் சஞ்சய் – நடிகர் சந்தீப் கிஷன்

Sundeep Kishan talks about Jason Sanjay | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து தற்போது தமிழ் நாட்டில் முதலமைச்சராக உள்ள தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் தற்போது இயக்குநராக அறிமுகம் ஆகி உள்ளார். அவர் குறித்து நடிகர் சந்தீப் கிஷன் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கடினமாக உழைக்கக்கூடியவர் ஜேசன் சஞ்சய் – நடிகர் சந்தீப் கிஷன்
ஜேசன் சஞ்சய் மற்றும் சந்தீப் கிஷன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Jun 2026 13:57 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக உள்ளார் நடிகர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக இருந்த தளபதி விஜய் தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்கி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று முதலமைச்சர் ஆகி உள்ளார். இந்த நிலையில் சினிமாவில் அவரது மகன் என்ட்ரி கொடுத்துள்ளார். முன்னதாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு அவருடன் நடனம் ஆடி இருந்தார் ஜேசன் சஞ்சய். அந்தப் படம் வெளியான போது அது நடிகர் விஜயின் மகன் என்று தமிழக ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் பார்த்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் யாரும் எதிர்பாராதவிதமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். அதன்படி அவர் தற்போது இயக்கி உள்ள படம் சிக்மா. இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் அந்தப் படத்தில் நாயகனாக நடித்த சந்தீப் கிஷன் ஜேசன் சஞ்சய் குறித்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கடினமாக உழைக்கக்கூடியவர் ஜேசன் சஞ்சய்:

ஜேசன் சஞ்சய் மிகவும் கடினமாக உழைக்கக்கூடிய ஒரு இளைஞர். அவரும் அவரது குழுவினரும் இந்தப் பணியில் மிக நீண்ட காலமாக ஈடுபட்டு வருகின்றனர். தயாரிப்புக்கு முந்தைய பணிகள் மற்றும் படத்தொகுப்புப் பணிகளை அவர்கள் மிக விரிவாகச் செய்துள்ளனர். பொறுமை குறித்து ஒருவரால் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும். 25 வயது மட்டுமே நிரம்பிய ஒரு இளைஞர், இயக்கம் பணியில் ஈடுபட்டிருந்தபோது இவ்வளவு பொறுமையாகவும், அமைதியாகவும், தனக்கு என்ன வேண்டும் என்பதில் இவ்வளவு தெளிவுடனும் செயல்பட்டதைக் கண்டு நான் மெய்மறந்து போனேன்; அது உண்மையிலேயே பிரமிக்கத்தக்கதாக இருந்தது.

அவர் பார்ப்பதற்குத் தன் தந்தையான ‘தளபதி’ விஜயைப் போலவே அச்சு அசலாக இருக்கிறார். நீங்கள் சந்திக்கக்கூடியவர்களிலேயே மிகவும் இயல்பான, பணிவான இளைஞர்களில் இவரும் ஒருவர். அவரைப் போன்ற ஒரு சகோதரனைப் பெற்றதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அவர் திரைப்படத் தயாரிப்பு மற்றும் படத்தொகுப்பு ஆகிய துறைகளை முறையாகப் பயின்றுள்ளார்; அவரும் அவரது குழுவினரும் இணைந்து பணியாற்றும் விதத்தைப் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கிறது. இவ்வளவு இளம் வயதிலேயே ஒரு திரைப்படப் படைப்பாளியுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்து மிக நீண்ட காலம் ஆகியிருந்தது; அது எனக்கு ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக அமைந்தது. இன்றைய தலைமுறையினர் திரைப்படக் கதை சொல்லும் முறையை எந்தக் கண்ணோட்டத்தில் அணுகுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. தற்போது ‘தளபதி’ விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்; அந்த வகையில் நாங்கள் மிகுந்த பெருமை கொள்கிறோம் என்று சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… Manjanathi: நான் இதுவரை இயக்கிய படங்களிலிருந்து வித்தியாசம்.. மஞ்சணத்தி படம் குறித்து மாரி செல்வராஜ் சுவாரஸ்ய தகவல்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜன நாயகன் விஜய் பிறந்த நாளிலும் வெளியாகாதா? வைரலாகும் தகவல்

Follow Us