Vignesh Shivan: அதீத நெகடிவ் விமர்சனங்கள்… LIK பட தோல்வி குறித்து வெளிப்படையாக பேசிய விக்னேஷ் சிவன்!
Vignesh Shivan About LIK Flop: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இதில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் கிரித்தி ஷெட்டி இணைந்து நடித்திருந்த நிலையில், திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படம் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்த நிலையில், அது குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்கள் வரிசையில் ஒருவராக இருந்துவருபவர் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan). இவர் நடிகை நயன்தாராவின் (Nayanthara) கணவர் ஆவார். இவர் தமிழில் சிலம்பரசனின் நடிப்பில் வெளியான “போடா போடி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். கடந்த 2012ம் ஆண்டில் வெளியாகியிருந்த இப்படம், மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதையடுத்து நானும் ரௌடிதான், காத்துவக்குல ரெண்டு காதல் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். இந்த வரிசையில் இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany). இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan), எஸ்.ஜே.சூர்யா (SJ Suriya) மற்றும் கிரித்தி ஷெட்டி (Krithi Shetty) போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். கடந்த 2026ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதியில் வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
இந்நிலையில் திரையரங்குகளில் இப்படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பும் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட ரூ100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் தோல்வியில் முடிந்தது என கூறலாம். இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி தோல்விக்கான காரணம் குறித்து தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: கட்டா குஸ்தி 2 படத்தின் டப்பிங்கை முடித்த விஷ்ணு விஷால் – வைரலாகும் வீடியோ
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் தோல்வி குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் சொன்ன விஷயம்:
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன், “இணையத்தில் தாங்கள் கண்ட அதீத எதிர்மறை விமர்சனங்களால், திரையரங்குகளில் படத்தைப் பார்க்கத் தவறிவிட்டதாகப் பலர் எனக்குச் செய்தி அனுப்பியுள்ளனர். சில படங்கள் நெகட்டிவ் விமர்சனங்களைத் தாங்கி நிற்கின்றன; மற்றவை நிற்பதில்லை. தங்களின் சூழல், திரையுலக செல்வாக்கு மிக்கவர்களின் ஆதரவு இல்லாத படங்களுக்கு, பொதுமக்களின் பார்வை அவற்றின் தலைவிதியை முற்றிலுமாக மாற்றிவிடக்கூடும்.
இதையும் படிங்க: அந்த ஒரு சம்பவம் இனிஉருவ கேலி பண்ண கூடாதுனு முடிவு செய்தேன் – ஊர்வசி ஓபன் டாக்
தங்களின் அறிவையோ அல்லது மேன்மையையோ வெளிக்காட்ட எழுதப்பட்ட விமர்சனங்கள், ஒரு படத்தை விமர்சிப்பதை விட அதிகமாகச் செய்கின்றன. அவை பார்வையாளர்களை அந்தப் படத்திற்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதிலிருந்து ஊக்கமிழக்கச் செய்து, லட்சியமிக்க திரைப்பட இயக்குநர்களின் கனவுகளை நசுக்கிவிடுகின்றன. ஒரு படத்தின் வெற்றி, அதனுள் இருப்பதை விட, அதைச் சுற்றியுள்ளவற்றாலேயே பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகிறது” என அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.
விக்னேஷ் சிவன் கூறியது குறித்து வைரலாகும் எக்ஸ் பதிவு:
#LIK – #VigneshShivan pens down a note stating that many people may have missed his film due to the overwhelming negative reviews, which could have discouraged audiences from giving it a chance in theatres. Initially he had mentioned he is not satisfied with the box office… pic.twitter.com/DxPUBb04ll
— Movies Singapore (@MoviesSingapore) May 31, 2026
இயக்குநர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் வெளியாகியிருந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படமானது, 2040ம் ஆண்டில் நடக்கும் ஒரு காதல் கதையை மையமாக கொண்டு வெளியாகியிருந்தது. இப்படத்தின் பாடல்கள், காட்சிகள் என அனைத்தும் நன்றாகவே இருந்தது. ஆனாலும் சில காரணங்களால் இப்படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.