AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Abishan Jeevinth: மீண்டும் நாயகனாக நடிக்கும் அபிஷன் ஜீவிந்த்.. வெளியான புரோமோ இதோ!

Abishan Jeevinth and Shiva Rajkumar New Movie: தமிழில் இயக்குநராக நுழைந்து, தனது 2வது படத்திலே நாயகனாக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்த். இவர் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க ஆற்வம் காட்டிவரும் நிலையில், இவர் நடிக்கவுள்ள புதிய படம் தொடர்பான அப்டேட் பதிவு வெளியாகியுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Abishan Jeevinth: மீண்டும் நாயகனாக நடிக்கும் அபிஷன் ஜீவிந்த்.. வெளியான புரோமோ இதோ!
அபிஷன் ஜீவிந்த் புதிய திரைப்பட ப்ரோமோImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 31 May 2026 17:45 PM IST

கடந்த 2025ம் ஆண்டில் வெளியான டூரிஸ்ட் பேமிலி (Tourist Family) என்ற படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்தவர் அபிஷன் ஜீவிந்த் (Abishan Jeevinth). இப்படத்தின் இயக்குநரான இவர், படத்தில் சில காட்சிகளில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார். இப்படத்தில் அவரின் இயக்குதலை தாண்டி நடிப்பும் நல்ல வரவேற்பை பெற்றருந்தது. இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் (Aishwarya Rajinikanth) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மதன் (Madhan) இயக்கத்தில் இவர் ஹீரோவாக அறிமுகமான படம்தான் வித் லவ் (With Love). இப்படம் கடந்த 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியானது. இதில் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் (Anaswara Rajan) நடித்திருந்தார். பள்ளிப்பருவ காதல் கதையில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தை எடுத்ததாகவும் புதிய இடத்தில் நடிக்கவுள்ளதாக அபிஷன் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், இந்த புதிய படத்தின் அறிவிப்பு புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அபிஷன் ஜீவிந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: ஒரு புதிய உலகத்தை உருவாக்கியிருக்கிறேன்.. வேட்டுவம் படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த பா.ரஞ்சித்!

அபிஷன் ஜீவிந்த் பகிர்ந்துள்ள புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு புரோமோ பதிவு:

இந்த புரோமோவில் அபிஷன் ஜீவிந்த், கலகலப்பாக மற்றும் நகைச்சுவையாக பேசும் விதத்தில் அமைந்துள்ளது. அடுத்த படத்தில் இவர் ஹீரோவாக இயக்குநரா? என குழப்பும் விதத்தில் இருந்த நிலையில், இதில் அவர் ஹீரோவாகவே நடிக்கிறார் என்பதையும் உறுதி செய்துள்ளது. மேலும் இப்படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் மிக முக்கியமான வேடத்தில் நடிக்கிறாராம். இதுவும் இந்த புரோமோவில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் இயக்குனர் யார்?, எந்த நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: கருப்பானாக சூர்யா.. கருப்பு பட கிளைமேக்ஸ் காட்சி மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு!

இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என இந்த புரோமோவில் கூறப்பட்டுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் இயக்க, டிராமா கம்பெனி என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் விரைவில் இப்படம் பற்றிய அடுத்தடுத்த அப்டேட்டுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us